Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன..! முழு விவரம் உள்ளே..!

வைட்டமின் பி12 குறைப்பாடு ஏற்பட்டால் நம் உடலில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Vitamin B12 (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Health Tips): நம் உடல் ஆரோக்கியமாகவும் சரியாகவும் செயல்பட, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கான தினசரி தேவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12 (Vitamin B12). இது டிஎன்ஏவை ஒருங்கிணைக்க உதவுகின்றது. ஆற்றல் உற்பத்திக்கும் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.

மேலும், வைட்டமின் பி12 சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், மூளையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உடலில் வைட்டமின் பி 12 சத்து போதுமான அளவை பராமரிப்பது அவசியமாகும். இல்லையெனில், வைட்டமின் பி 12 ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இவை பல்வேறு வழிகளில் உடலை பாதிக்கும். வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இதில் பார்ப்போம்.

சோர்வு, தலைவலி பிரச்சினைகள்: உடலில் போதுமான வைட்டமின் பி 12 அளவுகள் இல்லையெனில், அது ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதித்து, இரத்த சிவப்பணு உற்பத்தியைக் குறைக்கிறது. இது மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவை ஏற்படுத்தும். இதன்காரணமாக, சோர்வு மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். மேலும், மனநிலை மாற்றங்களுக்கும் இது வழிவகுக்கும். Lorry-Car Accident: ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து; தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

நரம்பியல் பாதிப்பு: வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஓர் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக இருப்பது 'நிரந்தர நரம்பியல் சேதத்திற்கு' வழிவகுக்கும். சுகாதார அமைப்பு, முந்தைய வெளிப்பாடுகள் பொதுவாக அறிகுறியற்றவை. இருப்பினும், நரம்பியல் பிரச்சினைகள் உருவாகினால், அவை மீண்டு வர முடியாததாக இருக்கக்கூடும் என சுகாதார அமைப்பு எச்சரிக்கின்றது.

இரைப்பை குடல் பிரச்சினைகள்: இது செரிமான மண்டலத்தை பாதிக்கும். ஊட்டச்சத்தின் பற்றாக்குறை காரணமாக குடலைச் சென்றடைய போதுமான அளவு ஆக்ஸிஜனை அனுமதிக்காது. இது வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல், வீக்கம், வாயு, பசியின்மை மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தோலில் ஏற்படும் அறிகுறிகள்: வைட்டமின் பி 12 குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது உடலில் ஆரோக்கியமான இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்காதபோது ஏற்படும் நிலையை குறிக்கிறது. இதனால், தோலில் வெளிர் மஞ்சள் நிறம் ஏற்படும். மேலும், சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

வாய்வழி அறிகுறிகள்: இது நாக்கில் கூச்ச உணர்வு, வீக்கம் அல்லது எரியும் உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் வாய்வழி நிலை ஆகும். மேலும், அழற்சி மற்றும் வீங்கிய நாக்குடன் தொடர்புடைய நிலை, 'குளோசிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது.