Father's Day 2024: அன்பு, கண்டிப்பு, பாசத்தின் மறுஉருவம்... தந்தையர் தினம் 2024... வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!

"தோலுக்கு மேல வளர்ந்துட்டா அப்பன் பேச்சை கேட்கமாட்டோம், அதே அப்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் தட்டிகேட்கமா விடமாட்டோம்" என்ற நடிகர் விஜயின் வசனத்தை மறுஉருவாக்கம் செய்யும் வகையிலான தந்தையர் தினம் 2024 விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது.

Father's Day 2024 (Photo Credit: Pixabay)

ஜூன் 15, சென்னை (Chennai): Father's Day Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Father's Day: அன்னையர்களை பாராட்டி, அவர்களுக்கான நாளாக அன்னையர் (Mother's Day) தினம் சிறப்பிக்கப்படுவது போல, தந்தையர்களை கௌரவிக்கவும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் உள்ள 214 நாடுகளில், 114 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜூன் 19ம் தேதி தந்தையர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. மேலும், 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் சிறப்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் தந்தையர் தினம்:

19ம் நூற்றாண்டில் அன்னையர் தினம் அறிமுகமானதைபோல, தந்தையர்கள் (Father's Day 2024) தியாகத்தை கொண்டாடி, அன்னையர் தினத்திற்கு வரவேற்பு அளிப்பதை போல, தந்தையர் தினமும் சிறப்பித்து அன்னையர் தின கொண்டாட்டத்துடன், தந்தையர் தினம் சிறப்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. தந்தையரையும், முன்னோர்களையும் நினைவுகூரும் வகையில், உலகளவில் சிறப்பிக்கப்படும் தந்தையர் தினம் இந்தியாவில் ஜூன் 19 அன்று கொண்டாடப்படுகிறது. Phone Number Fee: இனி போன் நம்பருக்கும் கட்டணமா.? டிராய் சொன்ன விளக்கம்..!

தந்தையின் பங்கு:

தந்தையர் தினம் அன்று தந்தைக்கு பரிசு கொடுப்பது, குடும்பமாக அனைவரும் சேர்ந்து அவரை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வது தந்தையருக்கு அளிக்கும் உன்னதமான பரிசு ஆகும். குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் தூணில் தாய்க்கு உள்ள அதே உரிமை, கடமை, இலட்சியம் அனைத்தும் தந்தைக்கும் பொருந்துகிறது. வீட்டில் உள்ள வேலைகளை கவனித்து குடும்பத்தை தாங்கும் சக்தியை அன்னை கொண்டிருந்தாலும், அவர்களுக்கான அதே கடமையை செய்து தந்தையும் தனது பங்கை வெளிப்படுத்துகிறார்.

தந்தையர் நாள் வரலாறு:

கடந்த 1910ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி அமெரிக்காவின் ஸ்பாகெனில் நகரில் சொனோரா டொடன் என்பவரின் முயற்சியால் தந்தையர் தினம் முதன் முதலாக அனுசரிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் 36 வது ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினம் அன்று பொதுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். இந்த நாள் தந்தையர் தினமாக மட்டுமல்லாது, சர்வதேச ஆண்கள் தினமாகவும் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது. தற்போது உலகளவில் 114 நாடுகளில் ஜூன் மாதத்தில், 54 நாடுகளில் ஜூன் 19ம் தேதியும் சிறப்பிக்கப்படுகிறது.

தந்தையின் வலியை உணரும் தருணம்:

வீட்டில் அன்னை என்பவள் குடும்பத்தினை வளர்ச்சிக்கு தேவையான முதற்படிகளை செய்துகொடுப்பதை போல, தந்தை இரண்டாவது படிகளை தாங்கிப்பிடித்து சுமக்கிறார். கால சுழற்சியில் ஒவ்வொரு மூன்று தசாப்தத்திற்கும் ஒருமுறை ஒவ்வொருவரும் தாய்-தந்தை என்ற பொறுப்பை ஏற்று தங்களின் காலக்கடமையை தீர்க்க ஆயத்தமாகின்றனர். வளரும் பருவ வயதுகளில் தந்தையின் பேச்சை கேட்காமல் திரியும் பிள்ளைகள் எல்லாம். பின்னாளில் தந்தையான பின்னர் அந்த வலிகளை உணருகின்றனர். Chia Seeds Benefits: சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..! 

தந்தையுடன் பேசுங்கள்:

போற்றுதலுக்குரிய வகையில் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஒப்பற்ற தலைவன் - தலைவியாக உழைத்து, குழந்தைகளை கண்டித்து நல்வழிப்படுத்தி வளர்க்கும் ஒவ்வொருவரும் தந்தை தான் என்பதை மறைவால், தாய்மைக்கு அன்னை போல, தாங்கிப்பிடிப்பதற்கு இருக்கும் தந்தையின் தியாகத்தையும் உணர்ந்து அவர்களையும் பாராட்ட வேண்டும். இந்த ஆண்டுக்கான தந்தையர் தின நாளில் முடிந்தால் உங்களின் தந்தையுடன் கொண்ட சச்சரவுகளை மறந்து சில வார்த்தைகளை பேசுங்கள்.

லேட்டஸ்ட்லி வாழ்த்துகிறது:

அந்த வகையில், ஒவ்வொரு தந்தைக்கும் எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) குழுமம் தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்கிறது. உங்களுகவும், உங்களின் தந்தையாகவும் சிறப்பு வாழ்த்து செய்தி தொகுப்புகளையும் இத்துடன் இணைக்கிறது. அதனை நீங்கள் நேரடியாக வாட்சப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்துகொள்ளலாம். உங்களின் கவிதைகளையும் எங்களுடன் கருத்து வாயிலாக பகிர்ந்துகொள்ளலாம்.

அன்பு-பாசத்துடன் வாழுங்கள்:

தந்தை-தாயின் கைபிடித்து வளர்ந்த ஒவ்வொரு குழந்தைக்கும் மட்டுமே கிடைத்த பாசம், அரவணைப்பு, ஏக்கம் ஆகியவை அனைவர்க்கும் கிடைப்பது இல்லை. அதனை உணர்ந்து வாழும்போது உங்களை நம்பும் ஒருவருடன் அன்புடன், பாசத்துடன் இணைபிரியாது ஏற்ற-இறக்கம் வந்தாலும், அதனை எதிர்கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது சாலச்சிறந்தது. Xiaomi 14 Civi: இரட்டை செல்பி கேமராக்களை கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

இதோ உங்களின் தந்தையர் தின வாழ்த்துச்செய்தி..

  1. தாயென்பவள் பத்து மாதம் வாழ்க்கையை பிள்ளைக்காக தியாகம் செய்தவள், தந்தை வாழ்க்கையையே பிள்ளைக்காக தியாகம் செய்பவன்., இனிய தந்தையர் தின வாழ்த்துகள் என் தந்தையே!
  2. அம்மா என்ற மூன்றெழுத்து கவிதை போல, இயற்கை கொடுத்த அறிவு வரிக்கவிதை 'தந்தை', 'அப்பா' என்பன.. இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா!
  3. இயற்கையின் அற்புத படைப்பில், எதையும் தாங்கும் இதயமாக, எங்களின் வீட்டின் தூணாக, எங்களின் மனதில் மாமன்னனாக வாழும் அன்பு தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்..
  4. உலகிற்கு ஒரு தந்தை சாதாரண மனிதராக இருக்கலாம்., ஆனால் எனது வாழ்வின் விடியல் நீங்கள் தான் தந்தையே! இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா!
  5. என் உயரத்திற்காக உங்களை ஏணியாக்கி, அந்த தோளில் சுமந்து என்னை வளர்த்த அன்பு அப்பாவுக்கு, இந்த வாழ்த்தை காணிக்கையாக்குகிறேன் அப்பா..
  6. வளரும்போது வயதுகோளாறில் கண்டவனை ஹீரோ என்றேன், வளர்ந்தபின் தான் ஹீரோ நீங்கள் தான் என தெரிந்தது தந்தையே! இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா!!

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now