ஜூன் 14, சென்னை (Health Tips): உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளில் ஒன்று சியா விதை. இந்த சியா விதைகளை (Chia Seeds) பழச்சாறு அல்லது தண்ணீரில் சேர்த்து தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதையும், அதனை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.
உடல் எடை குறைப்பு: இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கின்றது. உடலில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. சியா விதைகளை சாப்பிடுவது உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. Love Marriage Bride Kidnapped: காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய வழக்கில் தாய், தந்தை உட்பட 6 பேர் கைது..!
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். மேலும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது: இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. சர்க்கரை நோயாளிகள் இதை தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்ல பயனை அளிக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சியா விதைகள் உட்கொள்வது: ஒரு நாளைக்கு 2-3 தேக்கரண்டி சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. சியா விதைகளை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல் சாறாக எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.
சியா விதைகளில் உள்ள பக்க விளைவுகள்: இதனை அதிகமாக உட்கொண்டால் வாயு, மலச்சிக்கல், வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும். சியா விதைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது அரிது. இருப்பினும், ஒவ்வாமை இருந்தால் சாப்பிடவே கூடாது. இதனை வேறு சில உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். குறிப்பாக ஆரஞ்சு, கடுகு, வெந்தயம் மற்றும் வேறு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.