Mother's Day 2024: குடும்பத்தின் ஒளிவிளக்காய் மிளிரும் அன்பு தேவதை அம்மா; அன்னையர் தினம் வரலாறு, வாழ்த்துக்கள் இதோ.!

அவளை போற்றும் விதமாக அன்னையர் தினம் சிறப்பிக்கப்படுகிறது.

Annaiyar Dhinam (Photo Credit: @Pixabay)

மே 08, சென்னை (Chennai): Mother's Day 2024 Images & Annaiyar Dhinam Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அல்லது மே 12ஆம் தேதி, சர்வதேச அளவில் அன்னையர் (Mothers Day) தினமானது சிறப்பிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சிறப்பிக்கப்பட்ட அன்னையர் தினம், பிற்காலத்தில் உலகளவில் பரவினாலும், ஒவ்வொரு நாடுகளை பொறுத்து தேதி என்பது மாறுபடுகிறது. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அண்ணா ஜார்விஸ் என்ற ஆர்வலரின் முயற்சியே பின்னாளில் உலக அளவில் அன்னையர் தினமாக (Annaiyar Dhinam) அங்கீகரிக்கப்பட்டது.

அன்னையர் தினம் உருவான வரலாறு: கடந்த 1854 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது பிறந்த அன்னா என்ற பெண்மணியின் தாய், தனது சகோதரர்களை அம்மை, டைபாய்டு, டீப்திரியா போன்ற நோய்களின் தாக்கத்தில் இழந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் தாயார் ரீவ் ஆன் ஜார்விஸ், தனது சுய அனுபவத்தின் மூலமாக குழந்தைகளின் இறப்பை தடுக்கவும், சுகாதாரத்தை பேணுவதற்கும் அங்குள்ள பெண்களுக்கு தாய்மையை போற்றி வழிகாட்டும் நபராக இருந்தார். இதற்காக தனது வாழ்நாளையும் செலவிட்ட நிலையில், அன்னையருக்கான தினம் வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதை ஜார்விஸ் தனது மகளிடம் கூறியுள்ளார். Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை கொண்டாடப்படுவது ஏன்? தங்கம் வாங்க மட்டுமா?.. இவ்வுளவு முக்கியமான விசேஷ நாளா இது?.! 

தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்: அன்னா வளர்ந்து பெரிய பெண்ணாகிய பின்னர், அன்னையர் தினம் என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் வாயிலாக பலரின் ஆதரவை பெற்று, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தாய்மார்களை கொண்டாடும் நாளாக அர்ப்பணிக்க வேண்டும் என மே 8, 1914 இல் அன்னையர் தினத்திற்கான மசோதாவை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் கையெழுத்திட காரணமாக அமைந்தார். மே 8ல் ஜார்விஸ் இறந்த காரணத்தால், அதனையொட்டிய தேதியில் அன்னையர் தினத்திற்கான கொண்டாட்டம் நடைபெறவேண்டும் என முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னாளில் அன்னையர் தினம் அங்கு மே 12ல் சிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்னையர் தினம்: அமெரிக்காவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் அன்னையர் தினத்தில் பலரும் தேவாலயங்களுக்கு சென்று கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள். கிராமங்களில் இருந்து வெளியேறும் நபர்கள், அன்றைய நாளில் தங்களது தாய்மார்களை சந்திக்கும் தருணமாகவும் அமைந்தது. ரஷ்யாவை பொறுத்தமட்டில் அன்னையர் தினம் என்பது மகளிர் தினத்துடன் இணைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு பஞ்சமில்லாத இந்தியாவில் மார்ச் 08 மகளிர் தினம் எனினும், மே 12 அன்னையர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்டத்துடன் அன்னையர் தினத்தை சிறப்பியுங்கள்: 2024 ஆம் ஆண்டுக்கான அன்னையர் தினம் மே மாதம் 12ம் தேதி கொண்டாடிக்கப்படுகிறது. வீட்டில் நமக்காக வருடத்தின் 365 நாளும் ஓய்வின்றி உழைத்து வரும் அன்னைகளுக்கு, அவர்களின் சிறப்பை போற்றும் விதமாகவும், தாய்மையை கொண்டாடி கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. தாய்மைக்கு வழங்கப்படும் இதயபூர்வமான அஞ்சலி, அவர்கள் மீது நாம் வைக்கும் அன்பு போன்றவை அவர்களின் மதிப்புகளை மென்மேலும் உயரச் செய்யும். இன்றைய நாளில் தாய்க்கு நம்மால் இயன்ற பரிசுகளை வழங்கி மகிழ்விப்பது, அவர்களின் தன்னலமற்ற அன்பை பாராட்டுவது, அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவது நல்லது. Kambu Laddu Recipe: உடலுக்கு வலுசேர்க்கும் கம்பு லட்டு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

பரிசுகளை மகிழ்ச்சி நினைவாக்க முயற்சியுங்கள்: இன்றளவில் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், தாய்மார்கள் தங்களது குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் தொடரத்தான் செய்கின்றன. வளர்ந்து வரும் நாகரீகம் ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவருக்கான உரிமையை வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் கீழ் இருப்பதால், அதனை கற்றுத் தெரிந்து கொண்ட நாமும் அதற்குஏற்ப செயல்படுவது, நம்மை கஷ்டத்திலும் படிக்க வைத்த அந்த தாய்க்கு நாம் செய்யும் தனிச்சிறப்பாகும். இந்த நாளில் உங்களின் தாய்க்கு ஸ்மார்ட்வாட்ச்சை பரிசாக அளிக்கலாம். ஏனெனில், அவர்களின் ஆரோக்கியத்தை அது தினமும் கண்காணிக்கும். உங்களின் அம்மாவுக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும் என்றால், அதனை வாங்கி கொடுக்கலாம், இசை கேட்க பிடிக்கும் என்றால், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்..

அவருக்கு சிறுவயதில் இருந்து நிறைவேறாத ஆசை ஏதேனும் இருந்தால், அதனை கேட்டு இன்ப அதிர்ச்சியாகவும் நிறைவேற்றலாம். நமது தாய்க்கு மனதார வாழ்த்துக்களையும் கூறலாம். அந்த வாழ்த்துக்கள் (Annaiyar Dhinam Vazhthukal 2024 Tamil) சில உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன. Benefits Of Turmeric: கோடை வெயிலில் வறண்ட சருமத்தை பாதுகாக்க மஞ்சள் எப்படி உதவுகிறது..? விவரம் உள்ளே..!

இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு அன்னைக்கும் லேட்டஸ்ட்லி (LatestLY Tamil) தனது இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது..