![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1715154894Turmeric-380x214.png)
மே 08, சென்னை (Beauty Tips): அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பெரும்பாலும் மஞ்சள் (Turmeric) பூசும் பழக்கம் இருந்தது. இதனால், அவர்களின் சரும அழகு பொலிவுடனும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஆனால், இன்றைய பெண்களிடம் மஞ்சள் பூசும் பழக்கம் முற்றிலும் அழிந்து விட்டது. இதன்காரணமாக, பலவித தோல் பிரச்சினைகள் வந்தவாறு உள்ளன. இவற்றில் இருந்து பாதுகாக்க மஞ்சளை வைத்து எப்படி முகத்தை பாதுக்காக்கலாம் என்று இதில் பார்ப்போம். Boy Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் காயம்; மீண்டும் அரங்கேறியுள்ள சம்பவம்..!
மஞ்சளில் உள்ள பயன்கள்: இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள் அதிகமாக உள்ளது. மேலும், இதிலுள்ள குர்குமின், தோல் நிறம் மாறுவதைத் தடுத்து, கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்கிறது. மஞ்சளில் கால்சியம் சத்து அதிகளில் இருப்பதால், சருமத்தை பாதுகாத்து செய்து எண்ணெய் பசையை நீக்குகிறது. வைட்டமின் பி6 சருமத்தை ஈரப்பதமாக்கி, வறண்ட சருமத்தை குணமாக்கி புதிய செல்களை உருவாக்குகின்றது. இது வயதான தோற்றத்தை முற்றிலும் அகற்றுகிறது.
மஞ்சள் ஃபேஸ் பேக் (Turmeric Face Pack): ஒரு சிறிய பவுலில் மஞ்சள்தூள் (Manjal) மற்றும் பால் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். பின்பு, அதனை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர், நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தினமும் முகத்தில் பூசிவர முகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதோடு, சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் இது தடுக்கிறது.