Akshaya Tritiya 2024 (Photo Credit: LatestLY)

மே 08, சென்னை (Chennai): Akshaya Tritiya 2024 Images & Atchaya Thiruthi 2024 Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on: அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க நல்லநாள் என்ற கூற்று இன்றளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. உண்மையில் அட்சய (Akshaya Tritiya 2024) திருதியை என்பது தானங்களுக்கான நாளாக கருதப்படுகிறது, சாஸ்திரமும் இதனை வலியுறுத்துகிறது. ஏழை-எளியோருக்கு, இல்லாதோருக்கு உதவிகளை செய்யும் தானங்கள் நாளாக கருதப்படும் அட்சய திருதியை நாளில், குண்டுமணியளவு தங்கத்தை தானம் செய்தாலும் வாழ்க்கையில் உச்சம் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் அமாவாசையில், மூன்றாம் நாள் வரும் திருதியை அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்பதற்கு பூரணமானது, நிறைவு மிகுந்தது என பொருள். அழியாத பலன் தரக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற மற்றொரு பொருளும் உண்டு. இந்த நாளில் எதை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

இந்நாள் நன்னாளாக சிறப்பிக்கப்படும் காரணம்: புராணங்களின்படி, கிருஷ்ணரின் பேரருள் காரணமாக குசேலன் குபேர யோகம் பெற்றதும் இந்த நாளில் தான் என்று கூறுவார்கள். கிருத யுதத்தில் அட்சய திருதியை நாளில் தான் பிரம்மா உலகம் படைத்தார் என்றும் கூற்று உண்டு. அதேபோல, திருமகளின் 8 அவதாரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் தான்ய லட்சுமி தோன்றியதும் இந்த நன்னாளில் தான். கேரளாவில் அட்சய திருதியை நாள் ஸ்ரீ பரசுராமரின் அவதார நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் சுக்லபட்சம் 14வது நாளில் அட்சய திருதியை நிகழ்வு கொண்டாடப்படுகிறது. மொத்தமுள்ள 15 திதிகளில் முதல் மூன்றாவது திதியாக இருக்கும் அட்சய திருதி, அதன் அதிபதி குருவால் உலோகத்தில் தங்கமாக பிரதிபலிக்கப்படுகிறது. இதனாலேயே அட்சய திருதியை நாளில் பலரும் பொன் ஆபரணங்களை வாங்குகின்றனர். இந்த நாளில் தங்கம் கட்டாயம் வாங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறவில்லை என்றாலும், குண்டுமணி தங்கத்தை மனதார தானம் செய்வதும் அதிக புண்ணியம் என்று தர்ம சாஸ்திரம் தெரிவிக்கிறது. Tamil Nadu Gold Carrying Mini Truck Accident: 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற லாரி.. திடீரென கவிழ்ந்து விபத்து.. ஈரோட்டில் பரபரப்பு..! 

அட்சய திருதியை நாளில் செய்யவேண்டியவை: புண்ணியம் கொண்ட இந்த நன்னாளில் எதைத் தொட்டாலும் தொடங்கும் என்ற ஒரே காரணத்தினால், பின்னாலில் அது வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த நாளில் இல்லாதவர்களுக்கு புத்தாடை, போர்வை, அன்னதானம் போன்ற தானங்களை தாராளமாக வழங்கலாம். இதனால் ஐஸ்வர்ய லட்சுமி அருள் நேரடியாக கிடைக்கும். உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானமாக அளிப்பதும் நல்லது. இந்த நன்னாளில் அதிகாலை எழுந்த நீராடி, கோவிலுக்கு சென்று வழிபட்டு புதிய செயல்களை தொடங்கலாம். விஷ்ணு, சிவன், லட்சுமி என நமது குலதெய்வம் உட்பட அனைத்து தெய்வங்களையும் மனதார வேண்டலாம். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் முறையையும் இந்த நாளில் தொடங்கலாம். அட்சய திருதி நாளில் வழங்கப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைகளைக் கடந்த முன்னோர்களுக்கும் சென்று சேரும் என்பதை ஐதீகம். இந்த நாளில் நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசு, நீர்மோர், விசிறி, குடை ஆகியவற்றை தானம் தரலாம்.

2024 அட்சய திருதியை (Akshaya Tritiya 2024 Time) நல்ல நேரம்: 2024 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை, மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 04:17 மணியளவில் தொடங்கி, 11ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 02:50 மணியளவில் முடிவடைகிறது. இந்த அட்சய திருதியை வெள்ளிக்கிழமை வருவதால் உச்சம் பெற்ற அட்சய திருதியையாவும் இது கருதப்படுகிறது. இந்நன்னாளில் வெள்ளிக்கிழமை காலை 05:33 மணிமுதல் நண்பகல் 12:18 மணிவரை நல்லநேரமாகவும், புதிய பணிகள் தொடங்க சிறந்த நேரமாகவும் கருதப்படுகிறது. தங்களால் இயன்ற தானத்தை செய்து புதிய செயல்களை முன்னேற்றத்திற்காக தொடங்கி, அட்சய திருதியை நாளில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் சிறப்பாக அமைய எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.