Neelakurinji Flowers: பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்; கண்ணை கவரவைக்கும் காணொளி உள்ளே.!

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்கள், தற்போது பூத்துகுலுங்கி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

Neelakurinji Flowers (Photo Credit: @supriyasahuias X)

செப்டம்பர் 27, நீலகிரி (Nilgiris News): இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும் பிரத்தியேகமாக காணப்படும் குறிஞ்சி மலர் (Neelakurinji Flowers), நீலநிறத்தில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை ஆகும். நீலகிரி, கொடைக்கானல், கேரளா மாநிலத்தின் மூணாறு பகுதிகள் என நீலகிரி மலைத்தொடரில் மட்டும் காணப்படும் இவ்வகை பூக்கள், பார்ப்பவர்களுக்கு வியப்பையும், எழில்வனப்பையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். Pothigai SF Express: பொதிகை எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்..! 

தென்மேற்கு பருவமழை நிறைவுபெறும் தருவாய் அல்லது நிறைவுபெற்ற பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் நீலகிரிஞ்சி மலர்கள் நீலகிரியை சுற்றிலும் நீலப்போர்வை போர்த்தினார் போல பூத்துக் குலுங்கும். அந்த வகையில், தராது நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தியானா பகுதியில் நீலகுறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. இதனை அங்குள்ள தோடர் இனத்தை சேர்ந்த குட்டன் என்பவர் படம்பிடித்து இருக்கிறார். அவர்படம்பிடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

நீலக்குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காணொளி & குட்டன்: