Pothigai SF Express (Photo Credit: Facebook)

செப்டம்பர் 27, கடையநல்லூர் (Tenkasi News): சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை தினசரி இரயில் சேவையாக பொதிகை (Pothigai Superfast Express) அதிவிரைவு 12661/12662 இரயில் தென்னக ரயில்வே (Southern Railway) சார்பில் வழங்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் இரவு 08:40 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி என மொத்தமாக 17 நிறுத்தங்களை கடந்து மறுநாள் காலை 08:00 மணியளவில் செங்கோட்டையை சென்றடையும். மொத்தமாக 11 மணி நேரம் 20 நிமிடங்களில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் பொதிகை அதிவிரைவு இரயிலில் பொதுப் பெட்டி, முதல் தர ஏசி, இரண்டாம் தர ஏசி, மூன்றாம் தர ஏசி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கின்றன. Weekend Special Bus: காலாண்டு & வார இறுதி விடுமுறை எதிரொலி; சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விபரம் இதோ.! 

இரயிலை கவிழ்க்க சதி?

மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 06:20 மணிக்கு கிளம்பும் இரயில் மறுநாள் காலை 05:40 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும். தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த இரயில் சேவை, பொதிகை சாரலை அனுபவிக்கும் பயணிகளுக்கு பிரதானமாக பயன்படுகிறது. இதனிடையே, கடந்த 25ம் தேதியில், இரவு வழக்கம் போல புறப்பட்ட ரயில் கடையநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், ரயில் தண்டவாளத்தில் பெரிய அளவிலான பாறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரயில் அதன் மீது மோதியதைத்தொடர்ந்து, இரயில் ஓட்டுநர் விரைந்து பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது, பெரிய அளவிலான பாறாங்கல்லில் இரயில் மோதியது தெரியவந்தது. இதனையடுத்து, கல்லை இரயில் தண்டவாளத்தில் வைத்தது யார்? சமூக விரோதிகளின் செயலா? இரயிலை கவிழ்க்க சதியா? என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.