Thiruvannamalai Deepam 2023: கார்த்திகை தீப நாள் எப்போது?.. தீபங்களை ஏற்றி நல்வழிப்பட விபரம் இதோ.! ஆன்மீக நண்பர்கள் தெரிஞ்சிக்கோங்க.!
ஒவ்வொரு கோவில்களும் அடுத்தடுத்து விழாக்கோலம் பூண்டிருக்கும்.
நவம்பர் 22, திருவண்ணாமலை (Tiruvannamalai Deepam): தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நிறைவுபெற்றதும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்கள் பலரும் விரதம் இருந்து கோவில்களுக்கு திரளாக படையெடுக்கும் மாதமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
இம்மாதங்களில் முருகன், ஐயப்பன் ஸ்வாமிகள் வீற்றிருக்கும் பல திருத்தலங்களுக்கு பயபக்தியோடு ஒரு மண்டலம் முதல் குறைந்தது 7 நாட்கள் வரையிலும் பலரும் மாலை அணிவித்து திருச்செந்தூர், சபரிமலை, பழனி, மேல்மருவத்தூர் உட்பட பல திருத்தலங்களுக்கு சென்று வருவது வழக்கம்.
இவ்வாறான பல தெய்வ வழிபாடுகளை கொண்ட இம்மாதத்தில், கார்த்திகை தீப விழாவும் வருகிறது. திருவண்ணாமலை ஏற்றப்படும் கார்த்திகை தீபம், உலகளவில் பிரசித்திபெற்ற நிகழ்வாகும். கார்த்திகை தீபத்தையொட்டிய நாட்கள், திருவண்ணாமலை நகரில் பலஇலட்சம் மக்கள் கிரிவலம் செல்ல குவிந்துவிடுவார்கள். Thanjavur Crime: ஓரினசேர்க்கை லீலை, உடலுறுப்பு விற்பனை?... உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு தஞ்சாவூரில் இளைஞர் கொடூர கொலை.!
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை மலைமீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்வாக இருந்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரரை தரிசிக்க, அன்றைய நாள் திருவண்ணாமலை மாவட்டமே ஸ்தம்பித்து இருக்கும்.
சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பண்டிகையில், கார்த்திகை தீபம் முக்கியமானது. நடப்பு ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா, நவம்பர் மாதம் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மட்டுமல்லாது, ஒவ்வொரு கோவிலிலும் தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் செய்யப்படும். அதேபோல, வீட்டிலும் அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்படும்.
கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பௌர்ணமியுடன் விண்மீன் கூட்டம் இணைந்து இருக்கும். கார்த்திகை நட்சத்திரம் நவம்பர் 26ம் தேதி மதியம் 02:05 மணிமுதல் தொடங்கி நவம்பர் 27 மதியம் 01:35 மணிவரை வீற்றிருக்கும். IMCR Research about Heart Attack: இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு தடுப்பூசி தான் காரணமா?.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் புதிய தகவல்.!
தீபநாளில் வீடுகளில் அகல்விளக்கில் தீபமேற்றி விழா சிறப்பிக்கப்படும். இது தீயசக்தியை விரட்டி மக்களுக்கு செழிப்பை தரும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. சில வீடுகளில் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி, பௌர்ணமி தீபம் வரை ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலையில் மாலை சுமார் 06 மணிக்கு மேல், சூரியனின் அஸ்தமத்துக்கு பின்னர் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பரணி தீபத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சுடரோடு, கார்த்திகை தீபம் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்படும். கேரளா மாநிலத்தில் சோட்டாணிக்கரை பகவதியின் ஆலயத்தில் நவ. 27 திரிகார்த்திகா பண்டிகையும் சிறப்பிக்கப்படும்.
அரசின் சார்பாக அன்றைய தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, செங்கோட்டை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலை செல்ல சிறப்பு பேருந்துகளும், இரயில் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். தீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.