Heart Attack (Photo Credit: Pixabay)

நவம்பர் 21, சென்னை (Health Tips): சமீபகாலமாகவே இளம் வயதினர் இடையே மாரடைப்பு ஏற்படும் அபாயம் என்பது வெகுவாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் தடுப்பூசி பயன்பாடுகள் அதிகரித்த நிலையில், பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்தன.

இதனால் மாரடைப்பு அபாயம் தடுப்பூசி மீது மக்களுக்கு திரும்ப தொடங்கியது. இந்த விஷயம் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. மருத்துவ நிபுணர்களும் மாரடைப்பு விஷயங்களுக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்றும் தெரிவித்தனர். Chithha on HotStar: மக்களின் பேராதரவைப்பெற்ற, சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிப்பு..! 

ஆனால், மக்களுக்கு முழுவதுமான நம்பிக்கை என்னவோ ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி கழகம் தனது தரப்பில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கொரோனா தடுப்பூசி காரணமாக இளைஞர்களிடம் மரணம் ஏற்படவில்லை. மரபு நோய்கள், வாழ்க்கை மாற்றம் உட்பட பல்வேறு காரணத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.