Kisan Vikas Patra Scheme: கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம்.. விபரம் உள்ளே..!

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் 1988-ல் சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்டது.

Saving Schemes (Photo Credit: Pixabay)

ஜூலை 11, புதுடெல்லி (New Delhi): சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்றால் சிக்கனமும் சிறுசேமிப்பும் வேண்டும் என்பார்கள். பாதுகாப்பான நடுத்தர மக்கட்களுக்கு பயன்படும் அதிக வருமானம் ஈட்டித் தரும் திட்டங்களில் தங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் திட்டகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்திய அரசு பல சிறு சேமிப்பு திட்டங்களை தபால் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. தற்போது இத்திட்டகளில் இணைந்து பணியாற்ற, அரசு சில தனியார் நிறுவனங்களுக்கும் பொது வங்கிகளுக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. சிக்கல் இல்லாத அரசு செயல்படுத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ஏராளம். Local Holiday In Namakkal: நாமக்கலில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை ஏன் தெரியுமா...? முழு விவரம் இதோ...!

கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம் (KVP): இத்திட்டம் (Kisan Vikas Patra Scheme) சேமித்த பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த திட்டமாகும். KVP இல் ரூ.10000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்திற்கு பின் ரூ.20000 ஆக கிடைக்கும். ஆனால் இத்திட்டம் 124 மாத முதிர்வு காலமுடையது.(10 வருடம் 4 மாதம்). இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 இதன் ஆண்டு வட்டி விகிதம் 7% ஆகும். முதலீடு செலுத்தும் போதே முதிர்வு தொகை கணக்கைடப்பட்டு பத்திரத்தில் அச்சடிக்கப்படுகிறது. மைனர்களுக்காக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இது நீண்டகால முதலீடாக இருப்பதால், குழந்தைகளுக்காக முதலீடு செய்வது சிறந்த பயனளிக்கும்.