ஜூலை 11, நாமக்கல் (Namakkal News): கொல்லிமலையில் கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் 'வல்வில் ஓரி' விழா (Valvil Ori festival) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக (Local Holiday) அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.