Holi Festival 2024: அன்பு, சகோதரத்துவத்தை வர்ணங்களால் வலுப்படுத்தும் ஹோலி பண்டிகை; வரலாறு, சிறப்புக்கள் என்ன?.. விபரம் இதோ.!

அதற்கான காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Holi Festival Celebration (Photo Credit: Pixabay)

மார்ச் 24, சென்னை (Chennai): சகோதரத்துவம், பரஸ்பர அன்பு, நல்வினைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், வடமாநிலங்களில் பிரதானமாக சிறப்பிக்கப்படும் பண்டிகை ஹோலி (Holi Festival). ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் சிறப்பிக்கப்படும் இப்பண்டிகை, நடப்பு ஆண்டில் நாளை (மார்ச் 25, 2024) அன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை வண்ணங்களின் திருவிழா என்றும் அழைப்பர். குளிர்காலத்தின் இறுதியில், பங்குனி மாதத்தின் இறுதியில் ஏற்படும் பௌர்ணமியன்று கோலி பண்டிகை உலகெங்கும் உள்ள இந்துக்களால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றளவில் அது பொதுப்பண்டிகையாகவும் மாறி இருக்கிறது.

பாரம்பரிய பண்டிகைக்கான காரணம்: இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிஜி ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்களால் சிறப்பிக்கப்படுகிறது. புராணப்படி, இறைவன் தந்த வரத்தால் அசுரன் ரண்யகசிபு தன்னையே கடவுள் என மக்கள் வழிபட வேண்டும் என்று கூறிட, அவரின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் மீது கொண்ட பேரன்பால் அவரின் பெயரையே உச்சரிப்பார். Holi Festival Chemical Colors: ஹோலி பண்டிகையில் பயன்படுத்தும் ரசாயன பொடிகளில் உள்ள ஆபத்து..! – விவரம் இதோ..!

Holi Festival Colors (Photo Credit: Pixabay)

ரண்யகசிபு தன்னை மனிதரோ, விலங்கோ, இரவிலோ, பகலிலோ கொல்லக்கூடாது என்ற கோரிக்கையுடன் வரம் பெற்றதால் அவரை யாராலும் எக்காலத்திலும் அழிக்க இயலாது. மகன் விஷ்ணுவின் துதியை போற்றுவதால், பிரகலாதனை கொலை செய்ய பல வழிகள் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில், இறுதியில் பிரகலாதன் தீயில் தனது தங்கையை பலிகொடுக்கும் சூழலும் உண்டாகும். இதற்குப்பின் அசுரனை அழிக்க புதிய விஸ்வரூபமான மனிதன்-விலங்கு வடிவில் நரசிம்மர் உருவமேற்ற விஷ்ணு ரண்யகசிபுவை கொன்று மக்களை காப்பார். இதன் தொடர்ச்சியாக வண்ணங்களின் திருவிழா ஹோலி கொண்டாடப்பட்டது. கண்ணன் - ராதாவுக்காக இப்பண்டிகை சிறப்பிக்கப்படுவதாக வேறொரு கூற்றும் உண்டு.

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கான நேரம்: ஹோலி தகனத்திற்கான நேரமாக மார்ச் 24 அன்று இரவு 11:13 முதல் 11:53 வரையிலும், ஹோலி கொண்டாட்டத்திற்கு உகந்த நேரமாக மார்ச் 25 அன்று காலை 9:54 முதல் 12:29 வரையிலும் என கணிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உண்டாகும் ஏற்ற-இறக்கங்களை மறந்து, அனைவரும் ஒன்றுமையாக இருக்க, நாடு செழிப்புற வண்ணங்களின் பேரில் சிறப்பிக்கப்படும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எமது லேட்டஸ்ட்லி நிறுவனம் சார்பில் (LatestLY Tamil) ஹோலி நல்வாழ்த்துகள்.