Thai Amavasai 2024: முன்னோர்களை வழிபட தயாரா?.. ஆன்மீக அன்பர்களே.. தை அமாவாசையை தவறவிடாதீங்க.. முழு விபரம் இதோ.!

இம்மாதம் 09ம் தேதி எதிர்வரும் தை அமாவாசை நாளினை முன்னோருக்கு திதி கொடுக்க நினைத்தோர் பயன்படுத்திக்கொள்வது, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

Thai Amavasai 2024 (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 03, சென்னை (Spiritual News Tamil): ஆன்மீக ரீதியாக 3 கால நிர்ணயங்களை ஜோதிட வடிவில் உரைக்கும் தமிழர்களின் பாரம்பரியம், புவியில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் பித்ரு சாபத்திற்கு உள்ளவர்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. இவ்வாறான சாபம் பெற்றவர்கள் எளிதில் சுபகாரியத்தை கைகூட வழியில்லாமல் தவிர்ப்பார்கள், பல தடைகளும் உண்டாகும். இந்த தடைகள் நீங்க தை மாதத்தின் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது முன்னோர்களின் அருளாசியை பெற உதவி செய்யும்.

தை அம்மாவாசை (Thai Amavasai 2024) நாளும், குலதெய்வ வழிபாடும்: 2024ம் ஆண்டு தை அம்மாவாசை பிப்ரவரி மாதம் 09ம் தேதி வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் (பிப்.09, 2024) காலை 08:95 மணிமுதல் பிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 04:28 மணிவரை இருக்கிறது. முன்னோர்களுக்கு பிப்ரவரி 09 அன்று காலை 09:30 மணிமுதல் காலை 10:30 வரையில் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். நமது வாழ்வியலில் ஏற்படும் ஒவ்வொரு நற் - தீசெயல் போன்றவற்றுக்கு பாக்கிய ஸ்தானத்தால் தீர்மானம் செய்யப்படும். இந்த ஸ்தானத்தில் வலிமை பெற்ற நபர்கள் சாதிக்க பிறந்தவர்கள் ஆவார்கள். இதனை மென்மேலும் வலுப்படுத்த பித்ரு பூஜை, குலதெய்வ வழிபாடு ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது. கோடி தெய்வங்களின் அருள் இருப்பினும், குலதெய்வத்தின் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே பிற தெய்வங்களின் அருளாசியும் கிடைத்து உயரலாம் என்பது மூத்தோர் வாக்கு. 4 Members of Family Death: வீட்டில் திறந்த நிலையில் இருந்த கேஸ்.. குடும்பத்தினர் 4 பேர் பலி..! பதறவைக்கும் சம்பவம்.! 

தர்ப்பணத்தால் (Thai Amavasai Tharpanam ) கிடைக்கும் நன்மை: சாஸ்திரங்களின்படி, மாதுர்காரன் சந்திரன் - பிதுர்காரன் சூரியன் இணையும் காலம் அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் மறைந்த முன்னோருக்கு திதி, தர்ப்பணம் ஆகியவை கொடுத்து, படையலிட்டு அவர்களை வழிபடுவது முன்னோர்களின் ஆசியை பெற பெற உதவும். பாக்கிய ஸ்தானமும் வலிமையாகும். இதனால் திருமணத்தடை, குழந்தை பிறப்பு விஷயத்தில் தாமதம், வறுமை சூழல், கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகும், கர்மவினை பரிகாரமும் கைகூடும். நமது முன்னோர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள், சந்ததியின் பாக்கிய பலத்தை அதிகரிக்க, வாழ்க்கையை முன்னேற்றத்தில் அழைத்துச்செல்ல, தடைகளை அகற்ற, பிற தோஷங்களை நீக்க இப்புவிக்கு வந்து ஆசி வழங்கி செல்வதாக ஐதீகம் கூறுகிறது. இவற்றில் அமாவாசை நாள் சக்திகள் பெற்ற நாள் ஆகும். அதனாலேயே அந்நாளில் மகிழ்ச்சியோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது, நமது குடும்பத்தை முன்னேற்றவும் உதவி செய்யும்.

சூரியனின் அருளை பரிபூரணமாக பெற: அம்மாவாசை நாளில் வழங்கப்படும் திதி, எள்ளு - நீர் கொண்டு வழங்கப்படும். நமது வலது ஆட்காட்டி விரலுக்கும் - கட்டை விரலுக்கும் இடையேயிருக்கும் பித்ரு ரேகை வழியே நீர் வார்த்து தரப்பட்டும் திதியின் சக்தி, கோடி மைல் தூரத்தில் இருக்கும் பித்ரு லோகத்தினை அடைவதற்கு உதவி செய்யும். நாம் அம்மாவாசை நாளில் வழங்கும் ஹிந்தியை பிதுர் தேவைதைகளிடம் சூரியன் வழங்கி, அவர்கள் முன்னோர்களிடம் பலனை சேர்க்கிறார்கள் என்பார் ஜோதிட வல்லுநர்கள். அமாவாசை நாளில் தீர்த்தக்கரையில் நீராடும் சமயத்தில், பிதுர்காரகன் ஸோரோப்பியனுக்கு ரெண்டு கைகளால் நீர் விடும் நிகழ்வு நன்மை தரும். கடல், புண்ணிய நதிகளில் நீராடுவது சூரியனின் அருளை பரிபூரணமாக பெற வழிவகை செய்யும். Perfume Factory Fire Accident: வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண் பலி., 31 பேர் காயம்., 9 பேர் மாயம்.! 

அற்புதங்கள் நிறைந்த தை அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: முன்னோராக வாழ்ந்து மறைந்தவர்களுக்கு திதி வழங்காத நபருக்கு பித்ரு தோஷம் உண்டாகும். அவர் புண்ணிய பலத்தால் அதிக தாக்கம் கொண்டவராக இருப்பினும், பித்ரு தோஷம் காரணமாக நல்லவற்றை கைகூட வழியில்லாமல் தவிக்கலாம். ஒருவர் மறைந்தாலும், அவரின் வம்சத்தை பித்ரு தோஷம் பாதிக்கும். தலைமுறைக்கு ஒருவர் சொத்து போன்றவற்றை சேர்க்காவிடினும், பித்ரு தோஷத்தை சேர்த்தால் கூடாது. மாதா-மாதம் அமாவாசை நன்னாளில் தர்ப்பணம் தர இயலாதோர், தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்ததும் பலன் பெறலாம். இந்நாளில் முன்னோருக்கு உணவு, புத்தாடை வைத்து படைத்தது, அவற்றை ஏழை-எளிய மக்களுக்கு தானம் வழங்கினால் நன்மை வந்துசேரும். தடையான சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும். நோய்கள் அகன்று, மனக்கவலை நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

செல்லவேண்டிய புனித தலங்கள்: இந்நாளில் இராமேஸ்வரம், கோடியக்கரை, திருச்சி அம்மா மண்டபம், திருப்புல்லாணி, திருவெண்காடு, திருச்செந்தூர், கன்னியாகுமரி, பவானி போன்ற இடங்களில் தர்ப்பணம் வழங்கலாம். இங்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் தர்ப்பணம் வழங்கலாம். தர்ப்பணம் வழங்கப்படும் நாள் காகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நாளாக இருக்கிறது. திதி பூஜைகள் நிறைவுபெற்று, காகம் சாப்பிட்டதும் தான் உணவை நாம் சாப்பிட வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக கருதப்படும் காகம், எமாலயத்தின் வாயிலில் இருக்கிறது. யமனின் தூதுவன் காகத்திற்கு உணவு வைப்பது, யமலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அமைதியாகி ஆசியை வழங்க காரணமாக அமைக்கும். சாதத்தை ஒருவேளை காகம் வந்து எடுக்காத பட்சத்தில், முன்னோருக்கு மனக்குறை இருப்பது என பொருள்படுவதாக சாஸ்திரம் தெரிவிக்கிறது.

அமாவாசை அன்று செய்யக்கூடாதது என்ன? தை அமாவாசை உட்பட எந்த அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் முன்னோர் நின்று எள்ளு தண்ணீர் பெற காத்திருப்பார்கள். ஆகையால் அன்றைய நாள் விரதம் இருப்போர் வாசலில் கோலம் போடக்கூடாது, மாமிசம் சாப்பிட கூடாது, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சப்பிடக்கூடாது. யாரிடமும் கோபத்துடன் பேசவும் கூடாது.