Death File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 03, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, துஷ்யனா கிராமத்தை சேர்ந்தவர் பவன் சிங். இவருக்கு சொந்தமான வாடகை வீட்டில், குடும்பத்தினர் தங்கி இருந்துள்ளனர். சம்பவத்தன்று, இவர்களின் வீட்டில் எவ்வித ஆட்கள் நடமாட்டமும் இல்லை. அவர்கள் எங்கேனும் வெளியூர் சென்று இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர்.

நால்வரின் சடலம் மீட்பு: இதனிடையே, குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உரிமையாளர் பவன் சிங்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல் துறையினரிடம் விபரத்தை கூறி இருக்கிறார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குடும்பத்தினர் நால்வரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

கியாஸ் வெளியேறியதால் மரணமா? அவர்கள் சந்திரேஷ் குமார், அவரின் சகோதரர் ராஜேஷ், சகோதரி புபிலி, சந்திரேஷ் குமாரின் மனைவி நிஷா என்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், நால்வரின் மரணமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சமையலுக்கு பயன்படுத்திய சிலிண்டர் திறந்து இருந்துள்ளது, அதில் இருந்த கியாஸ் அனைத்தும் வெளியேறி காலியாகியுள்ளது. Perfume Factory Fire Accident: வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண் பலி., 31 பேர் காயம்., 9 பேர் மாயம்.! 

தொடரும் விசாரணை: இதனால் கியாஸ் கசிவால் குடும்பத்தினர் மூச்சுத்திணறி உயிரிழந்தனரா? அல்லது தற்கொலை செய்ய முயன்று குடும்பத்தோடு கியாஸை திறந்து வைத்து, அக்காற்றை சுவாசித்து பலியாகினரா? என்பது தொடர்பான விபரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நால்வரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில் இவர்களின் மரணத்திற்கான கரணம் தெரியவரும் என கூறும் அதிகாரிகள், வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனம் தேவை மக்களே: இரவில் வீடுகளில் உறங்குவோர், கியாஸை சமையல் பாத்திரம் வைக்கும் பகுதியில் அணைத்து வைப்பது மட்டுமல்லாது, கீழயும் அணைத்து வைத்து உறங்குவதே நல்லது. ஏனெனில் உறக்கத்தில் யாரேனும் கை இடறி கியாஸை திறந்தாலும் அதன் வாயு உயிரைப்பறிக்கும். அதேவேளையில், வடமாநிலங்களில் குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நெருப்பு மூட்டும் பலரும், வீட்டிற்குள் நெருப்பை மூட்டி, அதனால் எழும் கரும்புகையில் சிக்கியும் மூச்சுத்திணறி பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.