Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 15ம் தேதி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்.. முழு விபரம் இதோ.!
அதுபற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
ஜனவரி 11, அயோத்தி (Ayodhya Dham): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் அமைக்கப்ட்டு இருக்கும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், அயோத்தியில் இந்து மத வரலாற்றில் புது மைல்கல்லை பதித்து இருக்கிறது. இந்துமத வரலாற்றில் பன்னெடுவாண்டுகளுக்கு பின்னர், சிறுவயது ராமர் வாழ்ந்த பூர்வீக நிலத்தில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு திறப்பு விழா காண்கிறது. இந்திய வரலாற்றை பறைசாற்றும் இதிகாசங்களில் முக்கியமானது இராமாயணம். இராமாயணத்தின் இதிகாசப்படி பூவுலகில் வாழ்ந்து மறைந்த ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணன், ஹனுமான் ஆகியோர் ஒருங்கே இருக்கும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்படுகிறது.
இதற்காக அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ரூ.1800 கோடி செலவில் கோவில் அமைப்பு, பலஆயிரம் கோடிகள் செலவில் உட்கட்டமைப்பு மாற்றம், புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் என பல மாற்றங்கள் அங்கு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்ந்து வரும் இந்துக்களால் எதிர்பார்க்கப்படும் ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் சிலை நிறுவுதல் விழாவன்று, மக்கள் அயோத்தி வந்து செல்ல பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இன்னும் 11 நாட்களே கொண்டாட்டத்தின் உச்சகட்ட நிகழ்வுகளுக்கு பாக்கி இருக்கின்றன. அந்த நன்னாளில் ராமர் கோவில் தீர்ப்பு விழா, கும்பாவிஷேக நிகழ்சகள் உட்பட பல்வேறு தகவல்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ராம பக்தர்கள் வீட்டில் இருந்து அதனை காண நேரலை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. Instagram Influecer Scam: இன்ஸ்டா பிரபலத்தை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர்… அமலா ஷாஜி கைதா?.!
ராமர் கோவில் புனித சடங்குகள்: கோவில் திறப்பு மற்றும் கும்பாவிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி,
ஜனவரி 15, 2024: மகர சங்கராந்தி தினத்தன்று கர்மாக்கள் முடிவுறும் சமயத்தில், ராமர் சிலையை நிறுவதற்கான இடத்தில பூஜைகள் தொடங்கும்.
ஜனவரி 16, 2024: கோவில் வளாகத்தில் இருக்கும் ராமர் சிலைக்கு சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 17, 2024: ராமரின் வருகையை மக்கள் அறிய ஏற்பட்டு செய்யும் வகையில், அன்று ராமர் சிலை நகரம் முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு எடுத்து செல்லப்படும். ராம்லாலா சிலையின் நகர சுற்றுப்பயணம்:
ஜனவரி 18, 2024: ராமர் கோவில் சிலை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள், வாஸ்து, பூஜைகள் போன்ற சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19, 2024: கோவிலுக்குள் புனித யாக தீ ஏற்படுத்தப்பட்டு, பிரபல மகரிஷிகளின் முன்னிலையில் யாகங்கள் நடைபெறும்.
ஜனவரி 20, 2024: ராமர் கோவிலில் இருக்கும் 81 கருவறை கலசங்கள் புண்ணிய நதிகளின் நீரை பயன்படுத்தி புனிதப்படுத்தப்படும். Moong Dal Idly: ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க... எவ்வளவு சுவை..!
ஜனவரி 21, 2024: பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 கலசங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும்.
ஜனவரி 22, 2024: மிருகஷிரா நட்சத்திரத்தில் ராமர் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமான் சிலைகள் திறக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு காண்பிக்கப்படும். இந்நாளின் அதிகாலை 12:29 மணி முதல் 12:30 மணிக்குள் ராமர் சிலை 84 நொடிக்குள் நிறுவப்படும்.
அயோத்தி மாநகரில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் நம்பிக்கை, மக்களின் ஒற்றுமை, கலாச்சார மறுமலர்ச்சி போன்றவற்றின் சின்னமாக இருக்கிறது. இதனால் மதரீதியான எல்லைகளை கடந்து, இந்திய வரலாற்றின் முக்கிய புள்ளியாகவும் அமைந்து பாரம்பரியத்தை உள்ளடக்கி இருக்கிறது.