Amala shaji (Photo Credit: _amalashaji_ Insta)

ஜனவரி 10, சென்னை (Chennai): எங்கும் எதற்கெடுத்தாலும் சமூக வலைத்தளம் என்று இன்றைய இளைஞர்களின் மோகமாக இருந்து வருகிறது இன்ஸ்டாகிராம் செயலி. அப்படி இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி (Amala shaji). அவ்வப்போது அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார். ட்ரொலின் மூலம் பிரபலமடைந்தவர் என்று கூட இவரை நாம் சொல்லலாம். இந்நிலையில், திரைப்பட நடிகர், நடிகைகள் இணையாக கிட்டத்தட்ட 41 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் அமலா ஷாஜி. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு ப்ரோமோஷன் வீடியோ போட்டு வந்துள்ளார்.

அதன்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட ப்ரோமோஷன் வீடியோவில் ANANYA FOREX பற்றி ப்ரோமோஷன் செய்திருந்தார். அதில், "என்னுடைய தோழி அனன்யா போரக்ஸ் ஒரு டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 1000 முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கிடைக்கும். அதாவது 10 ஆயிரம் வரை கூட கிடைக்கும். என்று விளம்பரம் செய்துள்ளார். நானும் இப்படி முதலீடு செய்தேன். எனக்கு பல ஆயிரம் வருமானம் கிடைத்தது. நீங்களும் செய்து பலன் அடையுங்கள்" என்று கூறியிருந்தார். Nepal Cricketer Sandeep Lamichhane Jail Term: பாலியல் வன்கொடுமை வழக்கு... நேபாள் கிரிக்கெட் வீரர்க்கு சிறை தண்டனை..!

ஏமாந்த ஐடி ஊழியர்: அதை நம்பிய ஐ.டி. ஊழியர், சமூக வலைதள பக்கத்தின் மூலம் அனன்யா போரக்ஸை தொடர்பு கொண்ட போது பெண் ஒருவர் பேசியுள்ளார். அவர் அனுப்பிய கியூ ஆர் கோட் மூலமாக முதலில் ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். உடனே அவர், கிரிப்டோ வேர்ல்ட் என்ற ஆப் மூலமாக டிரேடிங் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை லாபம் வந்துள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் அனுப்பியுள்ளார். அந்த பணத்தை எடுக்க வேண்டுமென்றால் 9 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் மொத்தமாக 22 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஐடி ஊழியர், 9 ஆயிரத்தைக் கட்டியுள்ளார். பின் அந்த பெண் லட்சம் கிடைக்கும், இன்னும் பணம் அனுப்புங்கள் என்று ஆசையை தூண்டியுள்ளார். இதனையும் நம்பி ஐடி ஊழியர், அந்த பெண் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் 20 நாட்களில் பணம் வந்து சேரும் என கூறி விட்டு அந்த பெண் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை ஊழியர் உணர்ந்துள்ளார். தொடர்ந்து சைபர் கிரைம் காவலரிடம் புகார் அளித்தார். Moong Dal Idly: ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க... எவ்வளவு சுவை..!

அமலா ஷாஜி கைதா?: இதன் காரணமாக அமலா ஷாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் ஒரு பொருளாதார நிபுணர் இல்லை, பொதுமக்கள் தனது ப்ரோமோஷனை ஆய்வு செய்து முதலீடு செய்யுமாறும், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.