Raksha Bandhan: சகோதர பாசத்தை உறுதியாக்கும் ரக்சா பந்தன் நாள் இன்று; உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!

பாசபந்தத்தை உறுதியாக்கும் வகையில் வடமாநிலங்களில் இன்று பிரதானமான ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Raksha Bandhan 2024 (Photo Credit: @KuldeepRawat730 / @Stat_freak X)

ஆகஸ்ட் 19, மும்பை (Mumbai): தெற்காசியாவில் உள்ள நாடுகளில் பிரதானமாக சிறப்பிக்கப்படும் இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ரக்சா பந்தன் (Raksha Bandhan). சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும்பொருட்டு, இந்நாளில் தங்களின் அன்புமிக்க சகோதர - சகோதரிகளுக்கு ராக்கி கயிறுகட்டி மகிழ்வார்கள். தங்களின் இளையவர்களுக்கு நல்லாசி வழங்கும் சகோதரர்கள், இன்று அவர்களுடன் தங்களின் நேரத்தை செலவிட எதுவாக ரக்சா பந்தன் சிறப்பிக்கப்படுகிறது. வடஇந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஸ்வர்ண (ஆடி) மாதத்தின் இறுதியில், முழு பௌர்ணமி நாளில் ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது. Hotel Style Malli Chutney Recipe: ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி சுவையாக செய்வது எப்படி..? 

பாசப்பிணைப்புகளை உறுதிசெய்யும் பண்டிகை:

இன்றளவில் தேசிய அளவில் கவனிக்கப்படும் ரக்சா பந்தன், சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் மத வேறுபாடுகள் இன்றி மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் நேசித்து, தன்னுடன் பிறந்தால் மட்டுமல்ல, வாழ்ந்தாலும் நீ என சகோதர-சகோதரியே என்ற தத்துவத்தை உணர்த்தி, பாசப்பிணைப்புகளை உறுதிப்படுத்தும் இவ்வாறான பண்டிகைகளை அனைவரும் கொண்டாடி சகோதரத்துவத்தை வளர்த்து வாழ்நாட்களில் முன்னேற லேட்டஸ்ட்லி-யும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.