ஆகஸ்ட் 17, சென்னை (Kitchen Tips): இட்லிக்கு நல்ல அருமையான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த முறை கொத்தமல்லியை (Coriander) வைத்து சட்னியை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வதுபோல செய்யாமல், ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சுவையில் ஒருமுறை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இந்த ஹோட்டல் ஸ்டைல் மல்லி சட்னி செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, அருமையான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அப்படிப்பட்ட மல்லி சட்னியை (Malli Chutney) சுவையாக எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
தேங்காய் - கால் மூடி (பொடியாக நறுக்கியது)
பொட்டுக்கடலை - கால் கப்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. Chettinad Puli Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்பு அதில் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லியை நீரில் கழுவி விட்டு சேர்த்து, சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். பின் அதில் பொட்டுக்கடலை, வதக்கிய வெங்காயம், மல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் மல்லி சட்னி ரெடி.