Ramadan 2024: புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அறிவித்த முஸ்லிம் நாடுகள்..!

புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக முஸ்லிம் நாடுகள் அறிவித்துள்ளன.

Ramadan 2024 (Photo Credit: pixabay)

மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): இஸ்லாமிய (Islam) சமயத்தின் ஐந்து முக்கியத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ரமலான் மாதம் (Ramadan). பிறை தெரிந்ததையடுத்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் கத்தாரும் மார்ச் 11ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதாக அவற்றின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனங்கள் மூலம் தகவல் வெளியிட்டது. மேலும் எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனை மன்றமான தர் அல்-இஃப்தா (Egypt's Dar Al-Ifta) மார்ச் 11 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதாக உறுதிசெய்துள்ளது. காசா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் இது பொருந்தும். மேலும் மொரோக்கோவிலும் லிபியாவிலும் (Morocco & Libya) மார்ச் 12 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. OnePlus Nord CE4: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

ரமலான் நோன்பின்போது ‘சஹர்’ எனப்படும் காலை உணவை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சியும் வழங்கப்படும்.