OnePlus Nord CE4 (Photo Credit: @technogain17 X)

மார்ச் 11, புதுடெல்லி (NewDelhi): பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) இந்த ஆண்டு தனது மிகவும் பிரபலமான தொடரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தத் தொடர் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE4) ஆகும்.

சிறப்பம்சங்கள்: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகம் செய்யப்படும். இதில் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமரா இருக்கும். மேலும் இந்த போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியும் இருக்கும். அதுமட்டுமின்றி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும். ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த இந்தியா..!

அதனுடன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி இன்-டிஸ்பிளே ஆப்டிகல் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது. வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி(NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் உள்ளன.