Sabja Seeds health benefits: சப்ஜா விதைகளின் நற்பலன்கள்: பயன்படுத்த மிக சுலபம்: ஆனால் பலன்களோ ஏராளம்.!
இதை அன்றாட உணவில் பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு, உடல் பருமன் நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.
செப்டம்பர் 8, சென்னை (Health Tips): நம் வீடுகளில் இருக்கும் திருநீற்றுப் பச்சை தான் சப்ஜா விதை என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது. இது உடல் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டதால் எல்லா காலங்களிலும் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம். நார்ச்சத்து கூடுதலாக இருக்கும் சப்ஜா விதைகளை ஒரு டீஸ்பூன் எடுத்து ஊற வைத்தாலே அது பெருகி பல மடங்காகும்.
இந்த விதைகள் குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்ற நோய்களை தவிர்க்கும். இந்த விதைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல், சிறுநீர்பாதையில் தொற்று ஏற்படாமல் (Urinary Tract Infection) தவிர்த்தல் மற்றும் இடை குறைப்பு போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. Palladam Murder Case: பல்லடம் கொலை வழக்கில் 4 பேர் கைது: தப்பியோட முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸ்.!
இந்த விதைகளுக்கென்று தனிப்பட்ட சுவை இல்லாததால் இவற்றை அனைத்து பானங்களுடனும் சேர்த்து பருகலாம். இந்த விதைகளை சேர்ப்பதன் மூலம் அந்த உணவு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும் மற்றும் உடல் குளிர்ச்சி பெறும்.
சப்ஜா விதைகள் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நஞ்சு நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதனால் சளி, மூக்கடைப்பு, தலைவலி மற்றும் சைனஸ் தொந்தரவு உடையவர்கள் இந்த சப்ஜா விதைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தலைபாரம் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவர்.