செப்டம்பர் 8, பல்லடம் (Tamilnadu News): திருப்பூர் மாவட்டம், கள்ளக்கிணறு பகுதியில் மோகன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மோகன் ராஜின் தோட்டத்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி மோகன் ராஜின் வீட்டுக்கு அருகே உள்ள அவரது தோட்டத்தில் ராஜ்குமார் (27), சோனை முத்தையா (22), மற்றும் செல்லமுத்து (24) ஆகியோர் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தன் தந்தை ஐயப்பனை (58) போனில் தொடர்பு கொண்டு அரிவாளை கொண்டு வரச் செய்தார். பின்பு அவர் மோகன்ராஜ் (49) , அவரது சகோதரர் செந்தில்குமார் (46), தாய் புஷ்பவதி (68) மற்றும் உறவினர் ரத்தினாம்பாள் (59) ஆகியோரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். முத்தையா மற்றும் செல்லமுத்து கொலைக்கு உதவியாக இருந்தனர். Joe Biden participates in G-20 Summit: இந்தியா புறப்பட்டார் ஜோ பைடன்: மாநாடு முழுவதிலும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுவார் என அறிவிப்பு.!
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முதலில் செல்லமுத்துவை கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜ்குமார் மற்றும் முத்தையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு படுத்தப்பட்ட ஆயுதங்களை கள்ளக்கிணறு அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கூறினர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை டி.எஸ்.பி சவுமியா தலைமையிலான காவல் துறை குழுவினர், தொப்பம்பட்டி பகுதியில் இருக்கும் புதரில் அந்த அரிவாளை எடுத்துக்கொண்டு ராஜ்குமாருடன் பல்லடம் நோக்கி சென்றனர். அப்போது ராஜ்குமார் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி இறங்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார். போலீசார் எச்சரித்தும் ராஜ்குமார் கேட்காததால், டி. எஸ்.பி சவுமியா அவரது இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி குண்டு பட்டதும் தப்பியோட முயற்சி செய்த ராஜ்குமார் அங்கேயே சுருண்டு விழுந்தார். அங்கிருந்து கொண்டுவரப்பட்டு, அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது. முழுமையான சிகிச்சை பெற அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.