Nellaiappar Temple Festival: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்; திடீரென வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி..!
இதனால் மாற்று வடம் கொண்டு வரப்பட்டு தேர் இழுக்கும் பணிகள் நெல்லையில் நடைபெறுகின்றன.
ஜூன் 21, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில், சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற புகழ்பெற்ற கி.பி 7 ம் நூற்றாண்டை சேர்ந்த 2000 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இது பாண்டியர்களின் கட்டுமானங்களை எடுத்துரைக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இதனால் தமிழக அளவில் மட்டுமல்லாது உலகளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் (Nellaiappar Temple Chariot Festival) திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறும்.
நெல்லையர் கோவில் தேர்த்திருவிழா:
திருவிழா நடைபெறும் ஜூன் 21ம் தேதியான இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பக்தர்கள் பலரும் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டிலேயே பக்தர்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டு வரும் தேர்த் திருவிழாக்களில் நெல்லையப்பர் கோவில் திருவிழா முக்கியமானது. Eclipse Mythology: நிகழாக் கதைகளும் நிகழும் கிரகணமும்.. பல நாடுகளில் உலாவும் மூடநம்பிக்கை..!
518 வது ஆனி திருவிழா:
அந்த வகையில், இன்று 518 ஆவது ஆனி தேரோட்டம் திருவிழா நெல்லையப்பர் கோவிலில் நடைபெறுகிறது. 450 டன் எடை கொண்ட தேர் மனிதர்களால் இழுக்கப்பட்டு ரக வீதிகளை வலம் வரும். இந்நிலையில், இன்று காலை நெல்லையப்பர் கோவில் தேர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கப்பட்டது. அச்சமயம் தேரின் வடமானது திடீரென அறுந்து விழுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.
வடம் அறுந்துபோனதால் பக்தர்கள் அதிர்ச்சி:
மேலும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தேரின் வடம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சரியான பராமரிப்பின்மை காரணமாக வடம் அறுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உடனடியாக மற்றொரு Vaடம் ஏற்பாடு செய்து தேரை இழுக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், வாக்குவாதம் செய்வதால் போலீசார் அவருடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.