Eclipse (Photo Credit: Pixabay)

ஜூன் 20, புதுடெல்லி (New Delhi): வருடா வருடம் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நிகழ்கிறதே அது பற்றி யோசித்ததுண்டா? ஐந்தாவதில் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். பின் கிரகணத்தின் போது, வெளியே செல்லாதே, விரதம் இரு, சூரியனைப் பார்க்காதே என்று பெரியவர்கள் கூறும் போது ஒரு சிறு ஆர்வத்தில் அவைகளை வீம்பாகவே செய்வோம். ஏனெனில் நாமக்குத் தான் ஐந்தாவதிலேயே செல்லிக் கொடுத்துவிட்டார்களே…

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா வரும் போது சூரியகிரகணமும், சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணமும் நிகழும் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஏன் நம் முன்னோர்கள் கிரகணத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடு விதித்திற்கிறார்கள், ஏன் இன்று வரை அறிவியல் காரணம் தெரிந்தும் அச்சப்படுகிறார்கள்? அதற்கு காரணம் நம் புராணங்களும் இதிகாசங்களும் சோதிட சாசனமும் சொன்ன கதைகளே! உண்மையா? பொய்யா? என்றெல்லாம் தெரியாது ஆனால் கதைகள் சுவாரசியாமாக இருக்கிறது.

சோதிட சாசனம்: நாம் எல்லோரும் அறிந்த கதை, தேவர்களும் அசுரர்களும் பார்கடலை கடைந்த போது அதிலிருந்து மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு அசுரர்களுக்கு மது கொடுத்து மயக்கமடைய வைத்துவிட்டு தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார். விஷ்ணுவின் சூழ்ச்சியை அறிந்த ஸ்வர்பானு என்ற அரக்கன் தேவர்கள் இருந்த வரிசையில் நின்று சிறிது அமிர்தத்தைக் குடித்தான். இதனால் கோபமடைந்த விஷ்ணு தன் சுதர்சனத்தால் ஸ்வர்பானுவை தலை வேறு உடல் வேறாக துண்டித்தார். ஆனால் அமிர்தம் அருந்திய காரணத்தால் அவனால் மரணிக்க இயலவில்லை. பின் விஷ்ணுவால், பாம்பின் தலையையும் மனித உடலையும் ராகு எனவும், மனிதத் தலையையும் பாம்பின் உடலையும் கேது என்றும், பெயர் பெற்று உருவமில்லாப் புகைக் கோள்களாக நவகிரகத்தில் சேர்த்துள்ளதாக நம் சோதிட சாசனம் கூறுகிறது. Thailand’s Legislature Approves Same-Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!

ஸ்வர்பானுவை சூரியனும் சந்திரனுமே விஷ்ணுவிடம் காட்டிகொடுத்ததால், பிரம்மனிடம் வரம் பெற்று ராகு, கேது இணைந்து அவர்களை பழிவாங்குவதற்காக தன் பிடியில் வைத்திருப்பதாகவும் அப்போது சூரியனும் சந்திரனும் தன் சக்தியை இழந்திருப்பதால், அவர்களை தன் இராசியில் கொண்டவர்களுக்கும் கற்பிணிகளுக்கும் ஆகாது எனக் கூறி வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இக்கதையை தான் கிரகணத்தின் போது பாம்பு விழுங்குகிறது எனக் கூறுகின்றனர்

மற்ற நாட்டு கதைகள்: இந்தியா மட்டுமல்ல, சூரியகிரகணத்தை பற்றி உலகம் முழுவதும் பல புராணக்கதைகளும் நம்பிக்கைகளும் கொட்டிக்கிடக்கிறது. பழங்கால சீனர்கள், ஒரு டிராகன் சூரியனைத் தின்று தன் பசியை ஆற்றிக்கொள்வதாகவும், அதை விரட்ட நெருப்பு அம்புகளை வானில் எய்தும் உள்ளனர். வியட்னாமில் தவளை சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதாகவும், நார்வே, சுவீடன் போன்ற ஸ்கெண்டினேவியன் நாடுகளில் சூரியனையும் சந்திரனையும் ஓநாய் கடித்து விழுங்குவதாகவும் பல கதைகள் சொல்லப்படுகின்றனர். இக்கதைகள் எல்லாம் கேட்க சுவாரசியமாக இருந்தாலும் அறிவியல் ஆதாரத்துடன் நிரூபிக்கிறது இவை எல்லாம் கேட்க மட்டுமே என்று.