Powerful Passports 2025: உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட்டுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? விபரம் உள்ளே.!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

Passport (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 03, வாஷிங்க்டன் டிசி (World News): ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு நாம் பயணிக்க வேண்டும் என்றால் பாஸ்போர்ட் (Passport) மிகவும் அவசியம். சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley & Partners) வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை (Powerful Passports):

பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் நாடுகள் 194 நாடுகளுக்கான விசா-இல்லா அனுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் ஆகியவை மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த ஆறு நாடுகளின் பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குச் செல்ல முடியும்.

பெல்ஜியம், டென்மார்க், ஐக்கிய இராச்சியம் ஆகியவை உலகின் 4வது வலிமையான பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து ஆகியவை உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளன. இந்த ஐந்தில் ஏதேனும் ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 191 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம். US President Donald Trump: பயணிகள் விமானம் மோதி விபத்து.. ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் – அதிபர் டிரம்ப்.!

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மால்டா, நியூசிலாந்து கூட்டாக 6வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் 190 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் கனடா, செக்கியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் 7வது இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் நீங்கள் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

அமெரிக்கா உலகின் 8வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்போர்ட் மூலம் 188 இடங்களுக்கு விசா இல்லாமலே போக முடியும். எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை 9வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டவை. இவை பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளை விசா இல்லாமல் சுற்றுப் பார்க்கலாம். லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகியவற்றின் பாஸ்போர்ட்டுகள் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு 186 நாடுகளில் விசா இல்லாமல் அனுமதி கிடைக்கும். இந்தப் பட்டியலில் 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்தியாவின் பாஸ்போர்ட் 85வது இடத்தில் உள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

Most Powerful Passports Powerful Passports 2025 இந்தியா பாஸ்போர்டுகள் World News பாஸ்போர்ட் Passport IATA Henley Partners Powerful Passports சிங்கப்பூர் Singapore France Germany Italy Japan Spain Austria Finland Ireland Luxembourg Netherlands South Korea Sweden Belgium Denmark Norway Portugal Switzerland Australia Greece New Zealand Canada Hungary Poland United States United Arab Emirates பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் ஸ்பெயின் ஆஸ்திரியா பின்லாந்து அயர்லாந்து லக்சம்பர்க் நெதர்லாந்து தென் கொரியா ஸ்வீடன் பெல்ஜியம் டென்மார்க் நார்வே போர்ச்சுகல் சுவிட்சர்லாந்து ஆஸ்திரேலியா கிரீஸ் மால்டா நியூசிலாந்து கனடா செக்கியா ஹங்கேரி போலந்து அமெரிக்கா எஸ்டோனியா லிதுவேனியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லாட்வியா ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா Today News Live News Tamil Today News in Tamil News Today News Live News இன்றைய செய்திகள்


Share Now