Pongal Train Booking: 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் இரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்; நேரில் சென்றவர்களுக்கு ஏமாற்றம்.!
2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களில் ஜனவரி 10ம் தேதிக்கான பயணசீட்டுகள் முற்றிலுமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 12, சென்னை (Chennai): தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், சென்னை நகரில் இருந்து மதுரை, நாகர்கோவில், செங்கோட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு தென்னக இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவுகள் அனைத்தும் இரயில்வே முன்பதிவு விதிப்படி, 120 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும். Weekend Special Bus: தொடர் விடுமுறை எதிரொலி; சொந்த ஊர் செல்வோருக்கு தித்திப்பு செய்தி; சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு இதோ.!
காத்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றம்:
அந்த வகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் 2025 பொங்கல் (Pongal Festival) பண்டிகையை முன்னிட்டு, தெற்கு இரயில்வே (Southern Railway) சார்பில் இயக்கப்படும் இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய முன்பதிவு வாயிலாக, பலரும் தங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய இணையவாயிலாகவும், நேரடியாக எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்தும் காத்திருந்தனர்.
முன்பதிவுகள்:
சரியாக காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவில், 3 - 5 நிமிடங்களுக்குள் ஒட்டுமொத்த இரயில்களுக்கான முன்பதிவுகளும் இடம்பெற்று முடிந்தன. ஜனவரி 10ம் தேதி பயணம் செல்வோர், செப்டம்பர் 12ம் தேதியான இன்று முன்பதிவு செய்கின்றனர். ஜனவரி 11ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 13ம் தேதி பயணிப்போர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம். ஐஆரசிடிசி (IRCTC) செயலி வாயிலாகவோ அல்லது www.irctc.co.in/nget/train-search என்ற இணையப்பக்கத்தின் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.