செப்டம்பர் 12, சென்னை (Chennai): தொடர் விடுமுறை, மிலாடி நபி (Eid e Milad), முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து (TNSTC & SETC) கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை, 14ஆம் தேதி சனிக்கிழமை, 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13, 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து பிற இடங்களில் இருந்தும், கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்:
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் (Kilambakkam Bus Stand) இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 14 ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Car - Lorry Crash: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி.. கடலூரில் சோகம்.!
கோயம்பேடு இருந்து சிறப்பு பேருந்துகள்:
சென்னை கோயம்பேட்டில் (Koyambedu Bus Stand) இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 13-ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 14ம் தேதி சனிக்கிழமை 19 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிற நகரங்களில் இருந்து சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை:
அதேபோல, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு மொத்தமாக 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் நகருக்கு திரும்புவோரின் வசதிக்காக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்துவிட்டீர்களா?
வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும், ஞாயிறு அன்று 14,271 பயணிகளும், திங்கட்கிழமை 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள தங்களின் இருக்கைக்காக முன்பதிவு செய்து விட்டனர். விருப்பம் உடையோர் மொபைல் செயலி (TNSTC App) அல்லது இணைய பக்கம் TNSTC.IN வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஎன்எஸ்டிசி இணையப்பக்கம் / செயலி வாயிலாக பயணச்சீட்டுகளை எளிதில் முன்பதிவு செய்யுங்கள்:
வெளியூர்களுக்கு பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு!
தாங்கள் பயணச்சீட்டு பெறுவதற்கு சிரமமாக உள்ளதா?
இனி கவலை வேண்டாம் உடனே TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அல்லது https://t.co/Ypl9EZ6nWv என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்!#ArasuBus | #TamilNadu | #BusOperation |… pic.twitter.com/01o0zJSKUS
— ArasuBus (@arasubus) May 15, 2024