Health Warning: மூளையை தாக்கும் நாடாப்புழு.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனமா இருங்க.. உயிருக்கே ஆபத்து.!
ஒட்டுண்ணியாக கருதப்படும் நாடாப்புழு காய்கறிகளின் வழியாக நமது உடலுக்கு சென்று மூளை வரை ஊர்ந்து சென்று பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
ஆகஸ்ட் 22, சென்னை (Health Tips): தினமும் நாம் சாப்பிடும் அத்தியாவசிய காய்கறிகளை சரிவர சமைக்காமல் அல்லது சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால் நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயம் அதனுள் மறைந்து கிடைக்கிறது. அதாவது ஒட்டுண்ணியாக கருதப்படும் நாடாப்புழு காய்கறிகளின் (Vegetable Parasite) வழியாக நமது உடலுக்கு சென்று மூளை வரை ஊர்ந்து சென்று பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் மூளைத்தொற்று போன்ற மிகப்பெரிய உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும். இதனால் கீழ்காணும் காய்கறிகளை சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. Vinayagar Chaturthi Special Kozhukattai: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
காய்கறிகளில் மறைந்திருக்கும் நாடாப்புழு :
அதன்படி பலருக்கும் பிடித்த முட்டைக்கோஸில் (Cabbage) நாடாப்புழுக்களின் முட்டைகள் மறைந்திருக்கும். முட்டைக்கோஸ் சமைத்து சாப்பிடுவோர் அதனை சரியாக சமைக்காமல் சாப்பிட வேண்டாம். காலிஃப்ளவர் (Cauli Flower) மற்றும் ப்ரோக்கோலி (Broccoli) போன்றவற்றை வாங்கி சாப்பிடுவோர் மண் சார்ந்த ஒட்டுண்ணிகள் குறித்து அலட்சியமாக இருக்கக் கூடாது. இவை காலிஃப்ளவர், ப்ரோக்கோலியில் இருக்கும் சிறிய துளைகள் போன்ற அமைப்பில் மறைந்து இருக்கும். இவற்றை சமைக்கும் போது 10 நிமிடம் இளம் சூடு உள்ள நீரில் மஞ்சள் சேர்த்து ஊற வைத்து பின் சமைத்து பரிமாறலாம்.
சுத்தம் செய்வதில் அலட்சியம் வேண்டாம் :
அதேபோல கீரை (Spinach) போன்ற உணவுகளில் சுத்தம் என்பது மிக அவசியம். கீரையின் இலைகளில் இருக்கும் முட்டைகள் போன்றவற்றை அகற்றிவிட்டு பின் சமைத்து சாப்பிடுவது நல்லது. இதில் அலட்சியம் காண்பிக்க கூடாது. பசலைக்கீரை போன்றவை வாங்கினால் அதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வயல்வெளியில் பயன்படுத்தப்படும் சுத்தம் இல்லாத நீர்ப்பாசனம் மற்றும் வயலில் உண்டாகும் இயற்கையான கழிவு நீர் போன்றவை அதனை கேடாக்கும் வாய்ப்புகள் ஏராளம். நிலத்திற்குள் வளரும் செடியான முள்ளங்கியின் (Radish) இலைகளிலும், பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி (Coriander Leaf) தழையிலும் ஒட்டுண்ணியான நாடாப்புழு இருக்கும். இதனால் காய்கறிகள், கீரைகளை சுத்தம் செய்வதில் இல்லத்தரசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)