Onion (Photo Credit: Pixabay)

நவம்பர் 12, சென்னை (Health Tips Tamil): மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல குறைவுகள் ஏற்படும். அதே நேரத்தில் நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயமும் மழைக்காலத்தில் அழுகல் மற்றும் வெள்ளை, கருப்பு போன்ற பூஞ்சை படர்வு போன்ற நிகழ்வுகளுக்கு உள்ளாகும். இதனை நாம் சரியாக கவனிக்காத பட்சத்தில் பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெங்காயத்தை நாம் பயன்படுத்தும் முன் அதன் தோளில் இருக்கும் காய்ந்த தோலை முற்றிலுமாக நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அதனை வெங்காயத்தின் மீது தூவி கைகளால் நன்கு சுத்தம் செய்து கழுவி எடுக்க வேண்டும். Health Warning: உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்.. மழைக்கால எச்சரிக்கை.!

மழைக்காலத்தில் கவனம்:

சொர சொரப்பான தன்மை வெங்காயத்தில் இருக்கும். சிறிய கிருமிகள் அதன் மேல் புறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால் வெங்காயத்தை நன்கு சுத்தம் செய்து வெட்டி பின்னர் அதனை ஒரு மணி நேரத்துக்குள் சமைத்து விட வேண்டும். ஒரு மணி நேரத்தை கடக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் மீது வெங்காயத்தில்படர்ந்து உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சமையல் செய்யும்போது வெங்காயம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெட்டினால் போதுமானது. அதற்கு முன் வெட்டி எடுத்து வைக்கும் பழக்கத்தை பல குடும்பங்களும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாகும். தேவைப்படும் வெங்காயத்தை தேவையான அளவு வெட்டி பயன்படுத்தும் முறையை பின்பற்றி வந்தால் மழைக்காலங்களில் தேவையில்லாத உடல் பிரச்சனைகளை நாம் தவிர்க்கலாம்.