Vinayagar Chaturthi Special Kozhukattai (Photo Credit: Facebook | YouTube)

ஆகஸ்ட் 21, சென்னை (Kitchen Tips): பிள்ளையாரின் பிறந்தநாளை தான் நாம் விநாயகர் சதுர்த்தியாக (Vinayagar Chaturthi 2025) கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டப்படும் விழாவாகும். இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய நாளில், தங்களின் வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகருக்கு பிடித்த பல்வேறு வகையான பலகாரங்களை செய்து படைக்கின்றன. பெரும்பாலும், விநாயகருக்குப் பிடித்த பலகாரங்கள் (Vinayagar Chaturthi Special Recipes) என்றால் அது லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவையாகத் தான் இருக்கும். இதில், விநாயக பெருமானுக்கு பிடித்தமான கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்?

தேவையான பொருட்கள்:

பூரணம் செய்ய:

  • தேங்காய் - 1 கப் (துருவியது)
  • வெல்லம் - 1 கப் (பொடித்தது)
  • ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  • நெய் - 2 தேக்கரண்டி
  • முந்திரி, பாதாம் - தேவையான அளவு.

கொழுக்கட்டை மாவு தயாரிக்க:

  • பச்சரிசி மாவு - 2 கப்
  • நெய் - 1 தேக்கரண்டி
  • உப்பு - 1 சிட்டிகை
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர், பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து, ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து கலக்கினால் பூரணம் ரெடி.
  • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவை பிசைந்த பிறகு, அதை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதில் பூரணத்தை வைத்து கொழுக்கட்டை வடிவில் வைத்து உருவாக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் கொழுக்கட்டைகளை போட்டு வேகவைக்க வேண்டும்.
  • கொழுக்கட்டைகள் மிதக்க தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, பின் ஒரு கடாயில் நெய் விட்டு காய்ச்சி, வேகவைத்து கொழுக்கட்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், அவ்வளவுதான் இனிப்பு சுவையுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெடி.