Earthquake Tips: நிலநடுக்கம் ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது., பாதிப்புகளை தவிர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?.. முழு விபரம் இதோ.!

இயற்கையின் பாதையில் உள்ள யாவையும் அவைக்கு ஒன்றே என்ற கருத்தின் அடிப்படையில், இயற்கை அன்னை தன்னை சமநிலை செய்யும்போது ஏற்படுத்தும் தாக்கம் நம்மை வருத்தப்பட வைக்கும் எனினும், அதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், சில செயல்முறைகள் நாம் நம்மை தற்காத்துக்கொள்ள கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Earthquake File Pics (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், 50,000-க்கும் அதிகமான உயிர்களை பறித்தது. அங்குள்ள இலட்சக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தற்போது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சுற்றி நிலநடுக்கமானது மையம் கொண்டிருக்கிறது. அதேபோல, ஐஸ்லாந்தில் இருக்கும் பல எரிமலைகள் தொடர்ந்து வெடிப்பை நிகழ்த்தி வருகின்றன. இது உலகளாவிய நிலநடுக்கம் மற்றும் அதனைத்தொடர்ந்து சுனாமி தொடர்பான எச்சரிக்கையை அதிகரித்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாடும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன்களுக்கு எச்சரிக்கை சமிக்கை: தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்பட்டால், உடனடியாக அந்த தகவலை பெறுவதற்கும், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் செல்போன்களுக்கு எச்சரிக்கை சமிக்கை அனுப்பி, அதனை சோதனை முயற்சியாக மேற்கொண்டு பார்த்தது. நிலநடுக்கம் என்பது பொதுவாக குறைந்தது 10 நொடிகள் முதல் அதிகபட்சமாக நிமிடங்கள் வரை ஏற்படும். இது தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு கூட ஏற்படலாம். அவை இயற்கையின் செயல் என்பதால், அதனை தீர்மானிப்பது கடினமானதாகும். Greta Gerwig Noah Baumbach Marriage: 12 ஆண்டுகால காதலரை கரம்பிடிக்கும் பார்பி படத்தின் இயக்குனர்: விரைவில் திருமணம்.! 

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தல்: கடுமையான நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்படும் போது, தரையின் மீது திறந்த வெளிகளில் படுப்பது நல்லது. நின்று கொண்டிருந்தால் நாம் கீழே தவறி விழ வாய்ப்புகள் அதிகம். நிலநடுக்கத்தை பொறுத்தமட்டில் 7 புள்ளிகளுக்கு அதிகமாக சென்றால், சுனாமி போன்ற எச்சரிக்கையும் விடுக்கப்படும். நிலப்பகுதியில் 5 முதல் 6 புள்ளிகள் கட்டிடங்களை பதம்பார்த்துவிடும். கடல் பகுதியில் 7 மற்றும் 8 புள்ளிகளுக்கு மேல் ஏற்படும் நிலநடுக்கத்தால் பெரும் சுனாமியும் உண்டாகும். இந்நிலையில், தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?, அத்தியாவசிய பொருட்களை நிலநடுக்கத்திற்கு (Earthquake Preparedness) முன் எப்படி தேர்வு செய்து வைக்க வேண்டும்? என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவலும் தெரிவித்துள்ளது. அவை குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.

Earthquake Safe Stay (Photo Credit: Pixabay)

அவசர காலங்களில் தயாராக இருக்க வேண்டிய பொருட்கள்:

  1. பேட்டரி மூலமாக இயங்கும் டார்ச்,
  2. பேட்டரி மூலமாக இயங்கும் ரேடியோ,
  3. கூடுதல் பேட்டரிகள்,
  4. முதலுதவி சிகிச்சை அளிக்கும் மருந்துகள்,
  5. அவசரத்திற்கு உடனடியாக தயார் செய்யப்படும் உணவுகள்,
  6. கேனில் அடைத்து வைக்கப்பட்ட நீர்,
  7. மெழுகுவர்த்தி, தீப்பெட்டி,
  8. தண்ணீர் புகாத - மூடி உள்ள பாத்திரங்கள்,
  9. கத்தி,
  10. குளோரைடு மாத்திரைகள்,
  11. முக்கிய மருந்துகள்,
  12. கையிருப்பில் சிறிதளவு பணம்,
  13. ஆதார் கார்டு,
  14. ரேஷன் கார்டு,
  15. கடினத் தன்மை கொண்ட கயிறுகள்,
  16. கடின பணிகளுக்கு உபயோகம் செய்யப்படும் ஷூ ஆகியவை எப்போதும் நமது வீட்டில் அவசரகால பொருட்களாக இருக்க வேண்டும். Girl Died after Taking Abortion Pill: மாதவிடாய் வலியை குறைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட சிறுமி: மூளையில் இரத்தம் உறைந்த பரிதாப பலி.! 

நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்க: நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாம் கட்டியிருக்கும் வீட்டை பொறியாளரின் உதவியுடன், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் கட்ட வேண்டும். வீட்டில் உள்ள சிறு சிறு விரிசல் போன்றவற்றை உரிய முறையில் சரி செய்திருக்க வேண்டும். வீட்டின் சுற்றுச்சுவர் நல்ல திடத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர காலத்தில் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு சரியான விபரங்களை தெரிவிக்கவும், அவர்களுடன் இருந்தால் எப்படி இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்பதை முன்னதாகவே அவர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

நிலநடுக்கம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை: ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டால் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். வீட்டினுள் இருந்தால் கூரையில் இருந்து பெயர்ந்து விழும் பொருட்கள் நமது மேல் நேரடியாக விடாமல் இருக்க, டேபிள் போன்றவை ஏதேனும் இருந்தால் அதற்கு அடியில் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். கீழ் தளத்தில் இருப்பவராக இருந்தால், உடனடியாக வீட்டில் இருந்து வெளியே சென்று திறந்த வெளியில் நிற்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்போர் லிப்ட் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் உபயோகம் செய்யக்கூடாது. மாடியில் இருப்பவர்கள் மாடிப்படிகளை பயன்படுத்தி விரைந்து கீழே இறங்குவது நல்லது. வீட்டிற்கு வெளியில் சென்றால், திறந்த வெளியில் இருக்க வேண்டும். நிலநடுக்கம் தொடர்ந்தால், தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். கட்டிடங்கள், மரங்கள் போன்றவற்றிற்கு அடியில் நிற்கக்கூடாது. கார் போன்ற வாகனங்களுக்கு உள்ளே இருந்தால், பாலம் போன்றவற்றில் இருப்பதை தவிர்க்க வேண்டும். சாதாரண சாலையில் வாகனத்தை இயங்காத வகையில் நிறுத்திவிட்டு, தரையில் நிற்கலாம் அல்லது படுத்துக் கொள்ளலாம். WhatsApp Update: வீடியோ கால் பேசிக்கொண்டே, இனி ஆடியோ பதிவுகளை அனுப்பலாம்: வாட்சப்பில் புதிய அப்டேட் இதோ.! 

Tsunami (Photo Credit: Pixabay)

நிலநடுக்கத்திற்கு பின் செய்யவேண்டியவை: நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், சேதமடைந்த கட்டிடங்களுக்கு அருகில் அலட்சியமாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல, கட்டுமான இடுபாடுகளுக்குள் சிக்கிவிட்டால், லைட் மற்றும் தீப்பெட்டி போன்றவற்றை வைத்து நமது நிலையை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பின் நமது மூக்கு, வாய் வழியாக தூசி உள்ளே செல்லாமல் இருக்கும் வகையில் துணிகளை வைத்து மூக்கு மற்றும் வாய்களை பாதுகாக்க வேண்டும். நம் மீது விழுந்திருக்கும் சுவரின் நிலை என்ன? என்பதை பொறுத்து, மேற்படி முயற்சி மேற்கொள்ளலாம். பயத்தில் அலறாமல் விசில் போன்ற சத்தத்தை ஏற்படுத்தி, நாம் உள்ளே சிக்கியிருப்பதை வெளியில் இருப்பவர்களுக்கு உணர்த்தலாம். அடுக்குமாடி குடியிருப்புகள் வசிப்பவராக இருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், படிகளை முதலில் பயன்படுத்துவது நல்லது. உரிய பரிசோதனைக்கு பின்னர் லிப்டை பயன்படுத்துவது சரியானது. கடற்கரையோரம் இருப்பவர்கள், நிலநடுக்கத்திற்கு பின் கடல் நீர் உள்வாங்கும் செயலைக் கண்டால், எவ்வித தாமதமும் இன்றி அங்கிருந்து உயர்வான நிலப்பகுதியை நோக்கி செல்ல வேண்டும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement