அக்டோபர் 11, சிலி (World News): தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த அதிபயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள கேப் ஹார்ன் பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் அமெரிக்காவின் தெற்கு பகுதி மற்றும் அண்டார்டிகா இடைப்பட்ட பகுதிகளான டிரேக் நீர்வழியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் விலக்கிக்கொள்ளபட்ட நிலையில், சேதங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Philippines Earthquake: கட்டிடங்களை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிர்பயத்தில் கதறும் மக்கள்.. பீதியில் உறையவைக்கும் வீடியோ.!
சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு:
மேலும் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 6 பேர் பலியாகி இருந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே அருணாச்சல பிரதேசத்திலும் இன்று காலை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கிறது. தற்போது சர்வதேச அளவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் மிகப்பெரிய அளவிலான இயற்கை பேரழிவுக்கு வழிவகை செய்கிறதா? என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.