WhatsApp (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, சென்னை (Technology News): சர்வதேச அளவில் பிரதானமாக உபயோகம் செய்யப்பட்டு வரும் வாட்சப் செயலி, கருத்துக்களை எளிமையாக தனிப்பட்ட நபர்களுடன் மற்றும் குழுக்களில் பகிர பேருதவி செய்கிறது. இதனை பயன்படுத்துவதும் எளிதாக இருப்பதால், பலரும் வாட்சப் (WhatsApp) செயலியை உபயோகம் செய்து வருகின்றனர்.

பயனர்களின் தேர்வு வாட்சப் மட்டுமே: இதற்கு போட்டியாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் செயலியை அறிமுகம் செய்தாலும், தனிநபர் பாதுகாப்பு உட்பட பல்வேறு சாராம்சங்களின் காரணமாக வாட்ஸாப்பே விரும்பப்படுகிறது. வாட்சப் நிறுவனமும் தொடர்ந்து தனது பயனர்களின் வசதிக்காக புதுப்புது அமைப்புகளை வழங்கி வருகிறது.

புதுப்புது அப்டேட்கள்: இந்நிலையில், வாட்சப் செயலியை பயன்படுத்தும் நபர்கள், வீடியோ கால் பேசும்போது ஆடியோ பதிவுகளை பகிரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல, வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால், அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக பதிவிடும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. Girl Died after Taking Abortion Pill: மாதவிடாய் வலியை குறைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட சிறுமி: மூளையில் இரத்தம் உறைந்த பரிதாப பலி.! 

விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகம்: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்சப்பை பயன்படுத்துவோர் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அமைப்பை உபயோகம் செய்துகொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

வாட்சப் நம்பிக்கை: வீடியோ கால் பேசும்போது வாட்ஸப்பில் ஆடியோ பதிவுகளை பகிர்வது மட்டுமல்லாது, அதனை கேட்கவும் இயலும். இந்த அமைப்பு ஒவ்வொரு வாட்சப் பயனருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வாட்சப் தனது அறிவிப்பில் கூறிருக்கிறது.