Keerthy Suresh Wedding (Photo Credit: Instagram)

டிசம்பர் 12, கோவா (Cinema News): தமிழ், தெலுங்கு உட்பட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தெறி திரைப்படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாக இருந்தார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது திருமணம், இந்து முறைப்படி இன்று (டிசம்பர் 12) நடைபெற்று முடிந்தது. Bigg Boss Tamil Season 8: "இதுக்கு முன்னாடியே உங்களுக்கு ரெண்டு வாட்டி வார்னிங் வந்திருக்கு" சவுண்டை ஆப் செய்த ராயன்..!

கோவாவில் (Goa) நடைபெற்ற இவர்களின் திருமண வைபோகத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. பிராமணர்கள் சடங்குகளின்படி, அவரது தந்தை சுரேஷ் குமார் மடியில் கீர்த்தி அமர்ந்திருக்க, மணமகன் ஆண்டனி தட்டில் அவருக்கு தாலி கட்டியுள்ளார். மணமக்கள் கழுத்து நிறைய மாலைகள் அணிய, கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிற சேலை, பாரம்பரிய ஆபரணங்கள் அணிந்து திருமண கோலத்தில் இருந்தார்.

இதனையடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்: