நவம்பர் 15, டெல்லி (Finance Tips): அதிக வருமானத்தை விட சீரான சேமிப்பே, ஒருவரின் செல்வத்தை நிர்ணயிக்கிறது. பணத்தை சேமிப்பது எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமானதாக உள்ளது. செலவத்தை பெருக்க சிறுக சிறுக சேமிக்க வேண்டும். பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்கரார்களாக இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் பணத்தை சேமித்து அதை பெருக்குவதே. Boeing Layoffs: 17,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு; போயிங் நிறுவனத்தின் அறிவிப்பால் பதற்றத்தில் ஊழியர்கள்..!
செல்வந்தர் ஆக பின்பற்ற வேண்டியவை:
- முதல் மாதம் சம்பளம் வாங்கியதிலிருந்தே சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். காலதாமதமாக ஆரம்பித்தால் அதிக பணத்தை சேமிக்க வேண்டும்.
- அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சமாக இருக்க வேண்டும் என அவசியமில்லை மிச்சப்படுத்தினால் போதும்.
- சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பையும் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.
- தங்களின் செலவுகளையும் சேமிப்பையும் கண்காணிக்க வேண்டும் எதில் அதிகமாக செலவு செய்கிறோம் என கண்டறிந்து குறைத்துக் கொள்ள வேண்டும்.
- வரவு செலவுகளை டைரி, நோட்ஸ் அல்லது செலவு கண்காணிக்கும் செயலியில் குறித்து வைக்க பழக வேண்டும்.
- மாதம் ஆரம்பிக்கும் போதே பட்ஜெட் போட்டு செலவுகள் போக மீதத்தை தனியாக வேறொரு வங்கிக் கணக்கில் மாற்றி வைக்க வேண்டும். இதனால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
- பட்ஜெட்டில் இஎம்ஐ, வீட்டு செலவுகள், தனிப்பட்ட செலவுகளும் என அனைத்துடனும், தங்கம், நிலம், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் என பிரித்து முதலீடு செய்யவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மாதம் குறிபிட்ட சதவீத சம்பளத்தை சீரான முதலீட்டு முறையில் முதலீடு செய்து வர வேண்டும்.
- தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். அனாவசியமற்ற பொருட்களை வாங்கி குவித்தால் நிதி நிலையில் ஒரு போதுமே முன்னேற முடியாது.