Head Priest Murdered: ஆசி வழங்கிய குருவின் அதிர்ச்சி செயல்.. 56 வயது மடாதிபதியை கொன்ற 12 வயது சிறுவன்.. பகீர் காரணம் உள்ளே.!

தனக்கு தீட்சை கொடுத்த யோகி, சில ஆண்டுகள் கழித்து தன்னிடம் அத்துமீற முயற்சித்தால் பதறிப்போன சிறுவன் யோகியை கட்டையால் அடித்தே கொன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.

Head Priest Yogi Chaitanyanath | Minor Boy Akshay Gupta alias Balyogi (Photo Credit: @SachinGuptaUP X)

மே 27, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, டேங்க் சௌஹரா பகுதியில் வசித்து வருபவர் யோகி சைதன்யா நாத் (வயது 56). மடாதிபதியாக இருந்து வரும் யோகியிடம், சிசியனாக 7 வயதில் தீட்சை பெற்ற 12 வயது சிறுவன் அக்சய் குப்தா @ பால் யோகி இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக தங்களின் குடிலில் தங்கி இருக்கின்றனர். சிறுவனின் சொந்த ஊர் பீகார் மாநிலத்தில் உள்ள சஹர்சா மாவட்டம், பத்ரா கிராமம் ஆகும்.

தடியால் சரமாரி தாக்குதல்: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவன் யோகியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த மே 10ம் தேதி இரவில் இருவரும் உணவு சாப்பிட்டுள்ளார். பின் உறங்க தயாரான போது யோகி சைதன்யா, சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுவன் அறைக்குள் இருந்த தடியை எடுத்து யோகியை சரமாரியாக தாக்கியுள்ளார். Johnny Wactor Dies: பிரபல இளம் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை; திருட்டு செயலை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் மூவர் கும்பல் அதிர்ச்சி செயல்.! 

இந்த சம்பவத்தில் யோகி சைதன்யா பரிதாபமாக உயிரிழந்துவிட, சிறுவன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 2 நாட்கள் யோகி சைதன்யா நாத்தின் உடல் அங்கேயே இருக்க, அழுகி துர்நாற்றம் வீசிய பின்னர் பிற துறவிகளுக்கு விஷயம் தெரியவந்துள்ளது. சைதன்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என அவரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்: பின் இதுகுறித்து பிற துறவிகள் சைதன்யாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சைதன்யா உயிரிழந்த பின்னர் அவரின் செல்போன் மற்றும் ஏடிஎம் ஆகியவை மாயமாகி, அதில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மே 16ம் தேதி சைதன்யாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Gaming Zone Fire Video: வெல்டிங் பணிகளின் போது நடந்த துயரம்; 35 பேரின் உயிரைக்குடித்த தீ விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.! 

பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு: புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், நல்லடக்கம் செய்யப்பட்ட யோகி சைதன்யாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் யோகி தடியால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்: இதனையடுத்து, காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்த, அவருடன் இருந்த சிறுவன் பால் யோகியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது. விசாரணையில் சிறுவன் யோகி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற காரணத்தால் ஆத்திரத்தில் அடித்ததாகவும், அதன்பின் அவர் மயங்கியதும் நான் பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன். அவரின் செல்போன் நம்பரை வைத்து, ஏடிஎம் பணத்தை எடுத்தது நான் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை கைது செய்த காவல் துறையினர், சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now