மே 27, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (Johnny Wactor). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல் (General Hospital) என்ற படத்தில் நடித்ததற்காக நல்ல வரவேற்பை பெற்று அடையாளப்படுத்தப்ட்டர். அதனைத்தொடர்ந்து சைபீரியா, கிரிமினல் மைண்ட் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் நெடுந்தொடர்களிலும் இவர் நடித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு முதல் திரையில் தோன்றியவர், தற்போது வரை நல்ல அந்தஸ்த்தை பெற்று இருந்தார். இந்நிலையில், நேற்று இவர் தனது வீட்டில் நண்பருடன் இருந்தார். அச்சமயம் 3 பேர் கும்பல் ஒன்று, இவரின் காரில் இருந்த பொருளை திருட முயற்சித்துள்ளது. இதனை கவனித்த நடிகர், அவர்களை கண்டிக்க சென்றுள்ளார். Gaming Zone Fire Video: வெல்டிங் பணிகளின் போது நடந்த துயரம்; 35 பேரின் உயிரைக்குடித்த தீ விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!
கார் பாகத்தை திருட முயற்சித்து பயங்கரம்: அப்போது, கொள்ளை கும்பல் நடிகரை துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. உடனடியாக நடிகரை மீட்ட அவரின் நண்பர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவர் கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். கொள்ளை கும்பல் நடிகரின் காரில் இருந்த முக்கிய பாகமான கடாலிக் (Catalytic converter) கன்வெர்ட்டர் எனப்படும் பாகத்தை திருட முயற்சித்து கொலை செய்துள்ளது.