Constable Save Lives: தறிகெட்டு இயங்கி கால்வாயில் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு ஏழ்வரின் உயிரை பாதுகாத்த காவலர்.. குவியும் பாராட்டுக்கள்.!
நல்வாய்ப்பாக காவலர் துரிதமாக செயல்பட்டதால் 7 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பிப்ரவரி 19, கோநஸீமா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோநஸீமா மாவட்டம், பெல்லம்புடி பகுதியில் கார் ஒன்று பயணம் செய்தது. காரில் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் பயணம் செய்து இருக்கின்றனர். இந்நிலையில், கார் பெல்லம்புடி பகுதியில் சென்றபோது, சாலையோர கால்வாய் அருகில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. TN Budget 2024: மாணவர்கள், பெற்றோர், ஏழை-எளிய மக்களை மகிழ்விக்கும் அதிரடி அறிவிப்புகள்.. தமிழ்நாடு பட்ஜெட் 2024: முழு விபரம் இதோ.!
காவலரின் துரிதமான செயல்: இந்த விபத்தைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் செய்வதறியாது திகைக்க, அச்சமயம் எதற்சையாக காவல் அதிகாரி ஸ்ரீனிவாச அவ்வழியே சென்றுள்ளார். விபத்தில் சிக்கி காரில் இருப்பவர்கள் பரிதவிபத்தை கண்ட அவர், உடனடியாக விரைந்து சென்று காரின் கதவை திறந்து 7 பேரையும் பத்திரமாக மீட்டார். Tribal Group Violence: பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல்; இருதரப்பு மோதலில் 64 பேர் பலி..!
நன்றி தெரிவித்த குடும்பத்தினர்: அதிகாரியின் துரிதமான செயலால் காயத்துடன் உயிர்தப்பிய குடும்பத்தினர், அவருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர். காயமடைந்தவர் அவசர ஊர்தியின் உதவியுடன் அங்கிருந்து மருத்துவமனைக்கு மீட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் ஸ்ரீநிவாஸுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.