Karnataka Shocker: பணப்பிரச்னையால் விபரீதம்: குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை.. தனியார் ரிசார்ட்டில் நடந்த சோகம்.!

தொழில் செய்து கடன் அதிகரித்ததால் 11 வயது குழந்தையை தங்களுடன் அழைத்து வந்து, மகளை கொலை செய்த தம்பதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.

Madikeri Resort, Kollam Couple Suicide Case (Photo Credit: @ANI X)

டிசம்பர் 10, குடகு (Karnataka News): கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தை சார்ந்தவர் வினோத் பாபு (வயது 43). இவரின் மனைவி ஜிபி ஆப்ரகாம் (வயது 38). தம்பதிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 11 வயதுடைய மகள் இருக்கிறார்.

குடும்பமாக ரிஸார்ட்க்கு வந்த தம்பதி: இந்நிலையில், இவர்கள் மூவரும் வெள்ளிக்கிழமையன்று, கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றுக்கு வருகை தந்துள்ளனர். தங்களது காரில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தம்பதிகள் வருகை தந்திருந்த நிலையில், மறுநாள் காலை 10 மணிக்கு அங்கிருந்து கிளம்புவதாக கூறி அறையெடுத்து தங்கி இருக்கின்றனர்.

அறையெடுத்து தங்கி விபரீதம்: இவர்கள் மூவரும் அறையில் தங்கி இருந்த நிலையில், அன்று இரவு வெளியே சென்று உணவு சாப்பிட்டு விட்டு வந்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் 10 மணி கடந்த பின்னரும், இவர்களது அறையில் எந்தவிதமான நடமாட்டமும் இல்லை. மேலும், 10 மணிக்கு அறையை காலி செய்வதாக கூறியிருந்ததால், ஊழியர் அங்கு சென்று அவர்களை எழுப்பி பார்த்து இருக்கிறார். Top 5 Tourist Places in Tamilnadu: கட்டாயம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தலங்கள்: அரையாண்டு விடுமுறைக்கு தயாராகும் மாணவர்களே.. லிஸ்ட் இதோ..! 

ஜன்னல் வழியே பார்த்தபோது அதிர்ச்சி காட்சி: அனைவரும் எந்தவிதமான சத்தமும் எழுப்பாமல் இருந்ததால், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். பின்னர் 11 மணியளவில் சென்று கதவை தட்டியும் பலனில்லாததால், ஜன்னல் வழியே பார்த்தபோது இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

விரைந்து வந்த காவல் துறையினர்: உடனடியாக சம்பவம் தொடர்பாக மடிகேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கதவை உடைத்து தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் இந்த தம்பதிகள் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தொடரும் விசாரணை: இவர்கள் தொழில் செய்து வந்த நிலையில், கடன் பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததும் அம்பலமானது. இவர்கள் எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.