Top 5 Tourist Places in Tamilnadu: கட்டாயம் தமிழகத்தில் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தலங்கள்: அரையாண்டு விடுமுறைக்கு தயாராகும் மாணவர்களே.. லிஸ்ட் இதோ..!
Madurai Meenakshi Temple, Rameswaram Temple, Kodaikanal, Ooty Railway Station, Chennai Marina Beach Tourist Places (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 10, சென்னை (Chennai): மே மற்றும் டிசம்பர் மாதங்களில் பள்ளிகள்-கல்லூரிகளுக்கு பொது விடுமுறை என்பது கிடைக்கும். மே மாதங்களில் ஆண்டு தேர்வு முடித்து 30 முதல் 45 நாட்களும், டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வுகளும், கல்லூரிகளில் ஒரு பருவத்திற்கான இறுதி தேர்வுகளும் நிறைவுபெற்று 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரையிலும் விடுமுறை கிடைக்கும். இவ்வாறான தருணத்தை குடும்பத்தினர் இன்பமாக செலவிட, இன்பசுற்றுலாவுக்கு திட்டமிட்டு இருப்பார்கள். எப்போதும் படிப்பு, வேலை என இருப்போருக்கு இன்பசுற்றுலா நாட்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும். பல நாட்கள் தொடர் ஓட்டத்திற்கு கிடைக்கும் சிறிய ஓய்வாகவும் அது கருதப்படும்.

மாநில அளவிலான சுற்றுலாத்தலங்கள்: இவர்கள் தமிழகத்திற்குள்ளேயே கட்டாயம் பார்க்கவேண்டிய பல இடங்கள் இருகின்றன. சொந்த மாவட்டத்தில் இருக்கும் பல சுற்றுலாத்தளங்களை நாம் கண்டுகளித்திருப்போம் எனினும், தமிழக அளவில் பார்க்க வேண்டிய இடங்களும் இருக்கின்றன. அரையாண்டு தேர்வை முடிக்கும் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச்செல்ல விரும்பும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரத்தியேகமாக இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. Kamal Hassan an Anger Reply: நிக்சனின் பேச்சை தனது பாணியில் கண்டித்த கமல் ஹாசன்: ஆரவாரத்தில் ஆட்பறித்த ரசிகர்கள்.. வைரல் ப்ரோமோ உள்ளே.! 

01. ஊட்டி (Ooty): தலைநகர் சென்னையில் இருந்து 555 கி.மீ தொலைவில், 7 ஆயிரம் அடி உயரம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, சர்வதேச அளவிலான சுற்றுலாப்பயணிகளை கவரும் நகரம் ஆகும். அங்குள்ள நீர்வீழ்ச்சி, மூங்கில் காடுகள், அணை படகு சவாரி, மலை இரயில் பயணம், தொட்டபெட்டா, சாக்லேட் தொழிற்சாலை உட்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் வாழ்நாட்களில் ஒவ்வொருவரும் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள் ஆகும். எப்போதும் கணினி சார்ந்த வேலை பார்ப்போர், ஆண்டுக்கு ஒருமுறையாவது குளுகுளுவென பொழுதைகளிக்க கட்டாயம் செல்லவேண்டிய இடம் ஊட்டி ஆகும். ஊட்டி செல்ல சாலைவழி போக்குவரத்து உதவிடும். இரயில் பயணிகள் மேட்டுப்பாளையம் வரை வந்து, அங்கிருந்து மலை இரயில் பயணித்தும் ஊட்டியை அடையலாம். ஊட்டி மலை ரயிலுக்கு முன்பதிவு முக்கியம்.

02. மதுரை (Madurai): ஆன்மீக நகரமாகவும், தூங்கா நகரமாகவும் இருக்கும் மதுரை, சென்னையில் இருந்து 462 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் 3 வது முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை, வரலாற்று பின்னணி கொண்ட நகரம் ஆகும். இந்நகரில் உள்ள மீனாட்சி கோவில், திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோவில், பழமுதிர்சோலை, வைகை அணை, பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலை ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஆகும். வரலாறு சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு மதுரை பயணம் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். விமானம், இரயில், பேருந்து பயண வழிகளில் மதுரை நகரை அடையலாம். Love Couple Married in Police Station: கர்ப்பமாக்கிவிட்டு கைவிட நினைத்த காதலனை, காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்.! 

03. கொடைக்கானல் (Kodaikanal): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்று போற்றுதலுக்குரிய நகரம் ஆகும். தலைநகர் சென்னையில் இருந்து 525 கி.மீ தொலைவில் இருக்கும் கொடைக்கானலுக்கு செல்ல, திண்டுக்கல் வரை இரயிலில் சென்று கொடைக்கானல் செல்லலாம். அங்கிருந்து பேருந்து பயணத்தில் கொடைக்கானலை அடையலாம். கொடைக்கானலுக்கு செல்லும் வழியிலே, வெள்ளி நீர்வீழ்ச்சி வரும் அனைவரையும் தனது வெண்ணிறத்தால் அரவணைத்து வரவற்கும். கொடைக்கானல் ஏரி, பூம்பாறை கிராமம், பைன் காடுகள், குறிஞ்சி ஆண்டவர் கோவில், பிரையன் பூங்கா, குணா குகை, தலையார் நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் அங்கு இருக்கின்றன.

04. சென்னை (Chennai Tourist Places): தமிழகத்தின் தலைநகராகவும், இந்தியாவின் முக்கிய நகரமாகவும் இருப்பது சென்னை. இந்நகரை விமானம், கப்பல், சாலைவழி போக்குவரத்திலும் அடையலாம். தலைநகர் சென்னையில் சாந்தோம் சர்ச், கபாலீஸ்வரர் கோவில், அருங்காட்சியகம், வடபழனி முருகன் கோவில், மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா, வண்டலூர் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மாயாஜால், பீனிக்ஸ், ஃபோரம் மால்கள் போன்றவை இருக்கின்றன. குடும்பமாக சேர்ந்து நகரின் அழகை மாநகர போக்குவரத்து பயணத்தில் கண்டு கழித்தவாறு மேற்கூறிய பல இடங்களுக்கு சென்று வரலாம். MS Dhoni Vacation: குடும்பத்துடன் இன்பசுற்றுலா செல்லும் தல தோனி: விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.! 

05. இராமேஸ்வரம் (Rameswaram): தலைநகர் சென்னையில் இருந்து 562 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 173 கி.மீ தொலைவிலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இராமேஸ்வரம் நகரம். ஆன்மீக அன்பர்களால் காசிக்கு இணையான இடமாக போற்றப்படும் இராமேஸ்வரத்தில், இந்து புராணங்களின்படி இராமர் வணங்கிய சிவனின் ஆலயம் அமைந்துள்ளது. இதனால் பல ஆன்மீக பக்தர்கள் இராமேஸ்வரம் வந்து செல்வது வழக்கம். இராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் இரயில் மற்றும் சாலையை போக்குவரத்து பாலங்கள் இன்றளவும் அங்கு பிரபலம். உலகையே திரும்பி பார்க்கவைத்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த ஊரும் இராமேஸ்வரம் தான். அவரின் வீடு இன்று காட்சியகமாக இருக்கிறது. அவரின் நினைவிடத்தையும் பார்க்கலாம். அதேபோல, புயல் ஆட்கொள்ளப்பட்ட அரிச்சல் முனை, தனுஷ்கோடியையும் கண்டுகளிக்கலாம். உலகில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் ஒருபக்கம் கடல் ஆக்ரோசத்துடனும் மறுமுனையில் எவ்வித ஆட்பறிப்பும் இன்றி அமைதியாகவும் இருக்கும் கடலினை இங்கு காணலாம்.

மாவட்ட வாரியாக சுற்றுலாத்தலங்கள் விபரம் விரைவில்: இதனைப்போல தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி, நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரம், பல்லவர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் மகாபலிபுரம், காஞ்சிபுரம் நகரங்கள், வரலாற்றில் பல்லவர்களின் தொடங்கி பல மன்னர்களின் அரசாட்சியை கண்ட விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி கோட்டை உட்பட பல சுற்றுலாத்தலங்களையும் மக்கள் திட்டமிட்டு கண்டுகளிப்பது நமது மாநிலத்தில் உள்ள பெருமைகளை நாம் தெரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். அதேபோல, மாநில வாரியாக இன்பமாக மலைப்பாங்கான இடங்களில் சுற்றுலாவை மேற்கொள்ள கோவை மாவட்டத்தின் வால்பாறை, தென்காசி மாவட்டத்தின் குற்றாலம், தேனி, கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையோர பகுதிகள் உட்பட பல இடங்களும் இருக்கின்றன. இதுபோன்ற சுற்றுலாத்தலங்கள் தொடர்பான செய்திகளை அதிகம் இனி மாவட்ட வாரியாகவும் தெரிந்துகொள்ள நமது பக்கத்தில் இணைந்து இருங்கள்.