Vande Bharat Express: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் பயணிகளுக்கு தித்திப்பு செய்தி; தொடங்கியது வந்தே பாரத் இரயில் சேவை.!

இதனால் பயண நேரம் மிச்சப்படும்.

PM Modi Inaugurates Vande Bharat Express Service in Tamilnadu (Photo Credit www.pmindiawebcast.nic.in / @GMSRailway X)

ஆகஸ்ட் 31, மதுரை (Madurai News): பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இரயில் பயணிகளின் விரைவான, பாதுகாப்பான பயணம் மற்றும் நிறைந்த சேவையை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் இரயில் (Vande Bharat Express) சேவையை படிப்படியாக இந்தியாவெங்கும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மதுரை - பெங்களூர், சென்னை எம்.ஜி.ஆர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் இரயில் சேவைக்கு சமீபத்தில் மத்திய இரயில்வேத்துறை உத்தரவு வழங்கியது.

இன்று முதல் வந்தே பாரத் இரயில் சேவை:

இதனால் இரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி மதியம் 12:30 மணிக்கு மேல் மதுரை - பெங்களூர் (Madurai Bangalore Vande Bharat Train), சென்னை எம்.ஜி.ஆர் - நாகர்கோவில் இடையேயான இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரயில் முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவுபெற்ற நிலையில், பலரும் அதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஷார்ஷாட் காதலனை தேடி ஓடிய 16 வயது சிறுமி; போக்ஸோவில் இருவரை உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.. விசாரணையில் பகீர்.!

சென்னை, பெங்களூர் இரயில்கள்:

நண்பகல் 12:30 மணிக்கு மேல் இயக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்களில் மதுரை - பெங்களூர் இரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூர் காண்ட் (Bangalore Cant) இரயில் நிலையம் சென்றடையும். இதில் பெங்களூர் செல்ல 8 மணிநேரம் மொத்தமாக ஆகும். அதேவேளையில், சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் இரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று நாகர்கோவிலை சென்றடையும். இதில் பயண நேரம் 8 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

8 - 9 மணிநேரத்திற்குள் இலக்கை சென்றடையலாம்:

இன்று அறிமுக சேவையாக நண்பர்கள் 12:30 மணிக்கு மேல் இயக்கப்பட்ட இரயில்கள், இரவு 09:30 மணியளவில் இலக்கை சென்றடையும். பின் செப்டம்பர் 2ம் தேதி முதல் தனது தினசரி சேவைகளை தொடங்கும் வந்தே பாரத் இரயில்கள், மதுரை மற்றும் சென்னையில் இருந்து தினமும் காலை 05:15 மணிக்கு இயக்கப்படுகிறது. தங்களின் இலக்குகளான பெங்களூர் மற்றும் நாகர்கோவிலை இந்த இரயில்கள் மதியம் 01:15 மணியளவில் வந்தடையும். பின் மறுமார்க்கமாக மதியம் 03:00 மணியளவில் புறப்படும் இரயில்கள், இரவு 11 மணியளவில் தங்களின் இலக்குகளை சென்றுசேரும்.

இன்று வந்தே பாரத் சேவை தொடங்குவதை முன்னிட்டு, பெங்களூர் செல்ல திட்டமிட்டிருந்த பலரும் தங்களின் முன்பதிவுகளை ஏற்கனவே செய்திருந்தனர். இதனால் அவர்கள் பயணத்தை தொடங்கிய சிறப்பு காணொளியும் தென்னக இரயில்வே நிர்வாகத்தால் பகிரப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பணியாளர் பிரபா பெங்களூருக்கு வந்தே பாரத் இரயிலில் மதுரையில் இருந்து பயணிக்கும் காணொளி: