Minor Girl Suicide: முதல் பருவமடைதலை எதிர்கொண்ட 14 வயது சிறுமி பயத்தில் தற்கொலை; பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!

இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து, அவர்களுக்கு உரிய வயதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறுமிக்கு நடந்த சோகம் தொடராமல் இருக்க வழிவகை செய்யும்.

Girl Sad | Mensural / Periods File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 29, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மால்வாணி, லக்சுமி சாவ்ல்ஸ் குடியிருப்பில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். பருவமடையும் தருவாயில் இருந்த சிறுமி ஆன்லனில் மாதவிடாய் தொடர்பாகவும், முதல் மாதவிடாயில் ஏற்படும் வலி தொடர்பாகவும் தேடி அறிந்து வைத்துக்கொண்டதாக தெரியவருகிறது.

சுயநினைவின்றி மீட்கப்பட்ட சிறுமி: இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவில் சிறுமி தனது பருவத்தை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட வலி பொறுக்காத சிறுமி (14 Year Old Suicide after First Periods Pain), வீட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்டார். வீட்டில் மகள் சுயநினைவு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை கண்டிவழி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். Talking to Your Child About Periods: குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்து எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்?. ஒவ்வொரு தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

மரணம் உறுதி: அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் மரணத்தை உறுதி செய்தனர். மேலும், காவல்துறையினரும் சிறுமியின் தற்கொலை தொடர்பான தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு வந்தனர். சிறுமியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மாதவிடாய் வலி பயத்தால் சோகம்: விசாரணையில், சிறுமி கடந்த சில மாதங்களாகவே முதல் மாதவிடாய் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் வலி தொடர்பாகவும் தோழிகளிடம் பேசி இருக்கிறார். யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்திலும் வீடியோ பார்த்து, அதனால் ஏற்படும் வலி குறித்த பயத்தில் இருந்துள்ளார். இறுதியில் அவர் தனது முதல் பருவத்தை எதிர்கொண்ட சிலமணிநேரத்திற்குள் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

விழிப்புணர்வு வேண்டும்: பெண்களின் வாழ்நாட்களில் இயற்கையாக குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் ஏற்படும் பருவமடைதல் சுழற்சி குறித்த அச்சத்தை போக்க, மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.