Menstruation (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, சென்னை (Chennai): மாதவிடாய் என்பது உடலில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். அச்சமயம் பெண் குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்திப்பார். அதே நேரம் பல்வேறு விதமான பயத்தையும் குழப்பத்தையும் தங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வர். அவை அனைத்தையும் போக்க வேண்டியது தாயின் கடமையாகும்.

எனவே மாதவிடாய் நாட்களை கடந்து செல்வதற்கு பெண் குழந்தைகளுக்கு தாய் அன்போடும் அரவணைப்போடும் கற்றுக் கொடுக்க வேண்டும். பொதுவாக பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே அவர்களின் மார்புகள் பெரிதாகும். மேலும் அவர்களின் அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் முடியும் வளரும். இதன் மூலமே அவர்கள் பருவம் அடையப் போகிறார்கள் என்பதனை நாம் காணிக்க இயலும். இந்த நேரத்தில் பொதுவாக தாய்மார்கள் அனைவரும் பதற்றம் அடைவர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு எதுவும் நடந்து கொள்ளாமல் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். Refrigerator Not Cooling: உங்கள் பிரிட்ஜ்ஜில் கூலிங் பிரச்சனை இருக்கிறதா? அப்போ கண்டிப்பாக இந்த காரணம் தான்.!

இன்றைய காலகட்டத்தில் நாப்கின் விளம்பரங்களை பார்க்கும் பொழுதே குழந்தைகள் மாதவிடாய் பற்றி தெரிந்து கொள்ள நினைக்கின்றனர். அப்போதே அவர்களிடம் மாதவிடாய் பற்றி தாய்மார்கள் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

முதலில் இது குறித்த தயக்கம் ஏதும் இல்லாமல் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் குழந்தை உங்களிடம் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். பொதுவாக உங்கள் குழந்தைகளுக்கு 12 வயது தொடங்கியதுமே சானிட்டரி நாப்கின், ஒரு ஜோடி உள்ளாடைகள் ஆகியவற்றை எப்போதும் அவர்களது பள்ளி பையில் வைத்திருக்க அறிவுறுத்துங்கள். மேலும் நாப்கின்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதனை எவ்வாறு குப்பையில் போட வேண்டும் என்பதனை பற்றி எல்லாம் தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுங்கள். அதுமட்டுமின்றி மாதவிடாயின் போது உடல் உறுப்புகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொடுங்கள். அதே நேரம் பிறப்புறுப்பு பகுதிகளில் ரசாயனங்களைக் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்கமாறு கூறுங்கள். பொது இடங்களில் மாதவிடாய் ஆனாலும் அதனை எவ்வாறு எளிமையாக சமாளிக்கலாம் என்பதனையும் அறிவுறுத்துங்கள்.