Miss Universe 2023: உலக அழகி பட்டத்தை வென்றார் ஷெய்னிஸ் பலாசியோஸ்..! விபரம் இதோ.!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொராயா வில்சன் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த அன்டோனியா போர்சில்ட் ஆகியோர் உலக அழகி போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றனர்.

Miss Universe 2023 Sheynnis Palacios (Photo Credit: X)

நவம்பர் 19, (Social Viral): எல் சால்வடார் நாட்டில் உள்ள சான் சால்வடார் நகரில், இன்று காலை இந்திய நேரப்படி 07:30 மணிக்கு மேல் உலக அழகிபோட்டியானது கோலாகலமாக நடைபெற்றது. Gurpatwant Singh Pannun Warning to India: உலகக்கோப்பை இறுதிப்போட்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் - சீக்கிய பிரிவினைவாதி குருபத்வன்ட் பகீர் எச்சரிக்கை.! 

சர்வதேச அளவில் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, போர்ட்டோ ரிக்கோ, நிகரகுவா, தாய்லாந்து, கொலம்பியா நாட்டை சேர்ந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா (Nicaragua) நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஷெய்னிஸ் பலாசியோஸ் (Sheynnis Palacios) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Chicken Gravy Curry: சண்டே ஸ்பெஷல்.. ஹோட்டல் சுவையில், அருமையான சிக்கன் கிரேவி வைப்பது எப்படி?.. விபரம் உள்ளே.! 

அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொராயா வில்சன் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த அன்டோனியா போர்சில்ட் அழகிகள் அடுத்தடுத்த இடங்களை தக்கவைத்துள்ளனர். மிஸ் இந்திய அழகி ஸ்வேதா ஷ்ரத்தா (Shweta Sharda), 20 பேர் கொண்ட பட்டியலின்போது வெளியேறினார்.