Chicken Gravy (Photo Credit: YouTube)

நவம்பர் 19, சென்னை (Cooking Tips): கோழி இறைச்சியில் நாம் செய்யும் குழம்பு, வறுவல், பொரியல் நமது நாவை நாட்டியமாட செய்பவை. வார இறுதி விடுமுறை நாளில் காலையிலேயே எழுந்து இறைச்சி வாங்கி பலரும் சமைத்து சாப்பிட்டு, நல்ல உறக்கத்தை ஏற்றுக்கொள்வார்கள். இது அடுத்த வாரத்தில் அவர்களின் பணியை தொடர்ந்து செய்ய உதவுகிறது.

சில பேச்சுலர் ரூம்கள் இன்று கொண்டாட்டத்தோடு இருக்கும். அப்படியானவர்கள், சுவையான சிக்கன் கிரேவியை செய்ய நினைத்தால், அவர்களுக்காக பிரத்தியேகமாக செதுக்கப்பட்டுள்ளது இந்த செய்தித்தொகுப்பு. இந்த வழிமுறையில் சுவையான சிக்கன் கிரேவி செய்தால், எப்போதும் அதனையே விரும்பி சாப்பிடுவீர்கள். Google Doodle Today: 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: அசத்தல் கிளிக்ஸ் இதோ.! 

சிக்கன் கிரேவி செய்யத்தேவையான பொருட்கள் (2-3 பேர் அளவுக்கு):

கோழி இறைச்சி எலும்பு இல்லாமல் - 500 கிராம்,

எண்ணெய் - 150 மில்லி,

பட்டை, கிராம்பு, இலவங்கம், சோம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ரோஜாப்பூ, முந்திரி - தேவையான அளவு,

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 3,

தக்காளி (நறுக்கியது) - 2,

இஞ்சி பூண்டு விழுது - 2 சிறிய கரண்டி,

தயிர் - 100 மில்லி,

மஞ்சள் தூள் - கால் கரண்டி,

மிளகாய் தூள் - 1 1/2 கரண்டி,

மல்லித்தூள் - 2 கரண்டி,

கரம் மசாலா - 1/2 கரண்டி,

மிளகுத்தூள் - 1/2 கரண்டி,

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,

பொறிக்க:

சிக்கன் 65 மசாலா - 1 பாக்கெட் அல்லது உங்களின் விருப்பத்திற்கேற்ப,

எலுமிச்சை சாறு - சிறிதளவு,

இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,

முட்டை - 1,

கான் பிளவர் மாவு - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட இறைச்சியை நன்கு சுத்தம் செய்து, பின் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, முட்டை, கான் பிளவர் மாவு, சிக்கன் 65 மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். இந்த கலவை 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். பின் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோழி இறைச்சி பொறிக்க தயாராகுவதற்குள், கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, இலவங்கம், சோம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ரோஜாப்பூ, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை எண்ணெயில் வதங்க தொடங்கியதும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறத்தை அடையும் பருவத்தில், தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். Gurpatwant Singh Pannun Warning to India: உலகக்கோப்பை இறுதிப்போட்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் - சீக்கிய பிரிவினைவாதி குருபத்வன்ட் பகீர் எச்சரிக்கை.! 

இந்த கலவை கொதிப்பதற்குள் வறுக்க தயாராக இருந்த கோழி இறைச்சியை எண்ணெயில் ஊற்றி நன்கு பொரித்து எடுத்துக்கொண்டு, அதனை கொதித்துக்கொண்டு இருக்கும் கிரேவிக்குள் இட்டு 10 முதல் 15 நிமிடம் கழித்து கொத்தமல்லி-புதினா தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.

பொதுவாக சிக்கன் கிரேவியை சிக்கனை நேரடியாக சேர்ப்பது பலரின் வழக்கமான சமையலக இருக்கும். ஆனால், சற்று மாறுதலாக சிக்கனை பொரித்து சேர்த்து பார்த்தால், அதன் சுவை மிகவும் மாறுபட்டு கனகச்சிதமாக இருக்கும். இந்த சிக்கன் கிரேவியை பரோட்டா, சப்பாத்தி, தோசை என எதற்கு வைத்து சாப்பிட்டாலும், நாவை சுவையால் கட்டிப்போடும்.

குறிப்பு: பல்லாரிக்கு பதில் நாட்டு வெங்காயம் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.