Woman Damages Cab Door, Walks Away: சாலையில் திடீரென டாக்ஸி கதவை திறந்த பெண்.. ஆட்டோவில் கார் கதவு மோதி விபத்து..!

தற்போது கார் கதவினை ஆட்டோ இடிக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Woman Damages Cab Door (Photo Credit: @3rdEyeDude X)

பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi): பரபரப்பான சாலையில் கால் டாக்ஸியின் (Cab) கதவை திடீரென பெண் ஒருவர் திறந்ததை அடுத்து, அந்தக் கதவில் ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்து ஏற்பட்டும் கூட அந்தப் பெண் எதையும் கண்டு கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு நடந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் காரின் டாஸ் போர்டில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பெண் கதவைத் திறப்பதற்கு முன்பு, பயணியை ஓட்டுநர் எச்சரித்திருக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  அதே நேரம் அந்த பெண் மேல் தான் தவறு எனவும் பலர் கூறி வருகின்றனர். Happy Propose Day: உங்க காதலை புரோபோஸ் பண்ண கிளம்பிட்டீங்களா?. இதோ உங்களுக்கான டிப்ஸ்..!