Uttarkashi Car Swept Away with Passengers Terrifying Video (Photo Credit : @timesofindia X)

ஆகஸ்ட் 06, உத்தரகாசி (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் பெரு வெள்ளத்தின் நீர் சூழ்ந்து கொண்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. பொதுவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழை என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்தோ-திபெத்திய எல்லை படையினரின் 16 பேர் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டனர்.

50 பேர் மாயம் :

மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நிலம் சரிந்து சகதிகளும் அடித்து வரப்பட்டு கிராமத்துக்குள் புகுந்ததால் பல வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் சகதி மணல் குவியலால் சூழப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 50 பேர் மாயமாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் ராணுவ முகாமில் இருந்த 10 ராணுவ வீரர்களும் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. Uttarakhand Flood: மேக வெடிப்பு பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. உயிர் பயத்தில் கதறும் காட்சிகள்.! 

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார் :

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து கார் ஒன்று அதில் அடித்துச் செல்லப்பட்டது. காரில் பயணிகளும் இருந்த நிலையில், அவர்கள் காட்டாற்று வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்படும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. உள்ளூரைச் சேர்ந்தவர் பதற வைக்கும் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். அவர் காரில் ஆட்கள் இருக்கிறார்கள். என்ன கொடுமை இது? என பேசும் குரலும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. காரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மீட்கப்பட்டனரா?, அவர்களின் நிலைமை என்ன? என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன

காட்டாற்று வெள்ளத்தில் கார் அடித்துச்செல்லப்படும் பதற வைக்கும் வீடியோ :