செப்டம்பர் 16, வாஷிங்டன் (Cinema News): ஹாலிவுட் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்ட ராபர்ட் ரெட்ஃபோர்ட் (Robert Redford) இன்று (செப்டம்பர் 16) செவ்வாய்க்கிழமை தனது 89 வயதில் காலமானார். அமெரிக்காவின் உட்டா மலையில் சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவர், 1960-களில் பிரபல நடிகராக அறிமுகமானார். இதன்பின்னர், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை 'ஆர்டினரி பீப்பிள்' படத்திற்காக பெற்றார். Owen Cooper: எம்மி விருதுகள் 2025; 15 வயதில் சாதனை படைத்த சிறுவன்..!
பிரபலங்கள் இரங்கல்:
இவர், 'அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா' போன்ற காதல் வேடங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். மேலும், "தி கேண்டிடேட்" மற்றும் "ஆல் தி பிரசிடெண்ட்ஸ் மென்" படங்களில் நடித்தார். ஹாலிவுட்டில் சுயாதீன சினிமாவின் 'காட்பாதர்' எனவும் போற்றப்பட்டார். 2018ம் ஆண்டில் வெளியான 'தி ஓல்ட் மேன் அண்ட் தி கன்' படம் இவரது கடைசி திரைப்படம் ஆகும். தற்போது, இவரது மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.