Former Kerala CM VS Achuthanandan (Photo Credit: @thekorahabraham X)

ஜூலை 21, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான விஎஸ் அச்சுதானந்தன் (Former Kerala CM VS Achuthanandan), இன்று (ஜூலை 21) திங்கட்கிழமை திருவனந்தபுரத்தில் காலமானார். தனது 101வது வயதில் உயிரிழந்தார். கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி, மாரடைப்பால் எஸ்.யு.டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (CPI) பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான குழுவில் எஞ்சியிருக்கும் கடைசி உறுப்பினர் அச்சுதானந்தன் ஆவார். ரூ.20 பணம் கொடுக்க மறுத்த தாய் வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!

கேரள முன்னாள் முதல்வர் மறைவு:

ஆலப்புழாவின் புன்னப்பிராவில் பிறந்த அச்சுதானந்தன், முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 44. கடந்த 2006ஆம் ஆண்டு தனது 82 வயதில் கேரளாவின் முதலமைச்சரானார். மூன்று முறை, மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். 2001 முதல் 20 ஆண்டுகள், அவர் தொடர்ந்து மாராரிகுளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.